கனடாவில் தஞ்சம் கோரியுள்ள துருக்கிய ஊடகவியலாளர்கள்!
துருக்கிய ஜனாதிபதி Erdogan இன் ஆட்சியில் பத்திரிகைச் சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவும், அவரது ஆட்சியை விமர்சிப்பவர்களின் கருத்துக்களை மௌனிக்கவைக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்ப்ட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் ஏறத்தாழ 15 துருக்கிய ஊடகவியலாளர்கள் கனடாவிற்குத் தப்பிவந்துள்ளதாக அறியமுடிகிறது. மேலும் பலர் ஆப்பிரிக்க நாடுகளான சாட் (Chad) தன்சானியா (Tanzania) போன்ற நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்