விஜய் கோட்டையில் விழுந்த இடி- ரசிகர்கள் வருத்தம்
இளைய தளபதி விஜய் படங்கள் என்றால் தமிழகமே திருவிழா போல் காட்சியளிக்கும். அவருடைய ரசிகர்கள் பேனர், போஸ்டர் என கொண்டாடிவிடுவார்கள்.
இந்நிலையில் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் அதிக ரசிகர்கள் பலம் உள்ளது.
இதனால், தான் அவருடைய படங்கள் அங்கு பல திரையரங்குகளில் ரிலிஸ் ஆகும். தெறி படம் கேரளாவில் 200 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸாகியது.
ஆனால், பைரவா தற்போது வரை 70 திரையரங்குகள் தான் திரையிட அனுமதித்து இருக்கிறார்களாம், படம் ரிலிஸிற்குள் இவை 180 வரை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.