பிரமாண்டமாக நடந்து முடிந்த 74-வது கோல்டன் க்ளோப் விருது விழா- வெற்றியாளர்கள் பட்டியல் இதோ
ஆஸ்கர் விருதிற்கு பிறகு திரைத்துறையினர் மிகவும் மதிக்கும் விருது கோல்டன் க்ளோப் விருதை தான். இந்த விருது விழா இன்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் நடந்து முடிந்தது. இதில் அதிக பட்சமாக லா லா லேண்ட் படம் 7 விருதுகளை வென்றது. வெற்றியாளர்கள் பட்டியல் இதோ….
- சிறந்த திரைப்படம், டிராமா பிரிவு – மூன்லைட்
- சிறந்த திரைப்படம் , மியூஸிக்கல் அல்லது காமெடி பிரிவு – லா லா லேண்ட்
- சிறந்த நடிகர், டிராமா – கேஸி ஆஃப்லெக் (மான்செஸ்டர் பை தி ஸீ)
- சிறந்த நடிகர், மியூஸிக்கல் அல்லது காமெடி பிரிவு – ரயன் காஸ்லிங் (லா லா லேண்ட்)
- சிறந்த நடிகை, டிராமா – இஸபெல் ஹப்பெர்ட் (எல்லீ)
- சிறந்த நடிகை, மியூஸிக்கல் அல்லது காமெடி பிரிவு – எம்மா ஸ்டோன் (லா லா லேண்ட்)
- சிறந்த இயக்குநர் – டேமியன் சாஸெல் (லா லா லேண்ட்)
- சிறந்த உறுதுணை நடிகர் – ஆரோன் டெய்லர் ஜான்சன் (நாக்டர்னல் அனிமல்ஸ்)
- சிறந்த உறுதுணை நடிகை – வயோலா டேவிஸ் (ஃபென்சஸ்)
- சிறந்த அயல் மொழித் திரைப்படம் – எல்லீ
- சிறந்த அனிமேஷன் திரைப்படம் – ஸூடோபியா
- சிறந்த திரைக்கதை – டேமியன் சாஸெல் (லா லா லேண்ட்)
- சிறந்த இசை – ஜஸ்டின் ஹர்விட்ஸ் (லா லா லேண்ட்)
- சிறந்த பாடல் – சிட்டி ஆஃப் ஸ்டார்ஸ் (லா லா லேண்ட்)