Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழினம் பலிக்கடா ஆக முடியாது! தீர்வுக்கு தயாரில்லையா? மைத்திரி, ரணில், அனுர, மஹிந்தவுக்கு மனோ கடிதம்

January 8, 2017
in News, Politics
0
தமிழினம் பலிக்கடா ஆக முடியாது! தீர்வுக்கு தயாரில்லையா? மைத்திரி, ரணில், அனுர, மஹிந்தவுக்கு மனோ கடிதம்

தமிழினம் பலிக்கடா ஆக முடியாது! தீர்வுக்கு தயாரில்லையா? மைத்திரி, ரணில், அனுர, மஹிந்தவுக்கு மனோ கடிதம்

பெரும்பான்மை கட்சிகளின் அரசியல் இழுபறிகளுக்கு தமிழ் பேசும் மக்கள் இனியும் பலிக்கடா ஆக முடியாது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னனி, பொது எதிரணி ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கு தனித்தனியாக எழுதியுள்ள கடிதத்திலேயே இதை தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தில்,

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை கொண்டுவரும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் புதிய அரசியலைமைப்பு கலந்துரையாடல் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே போகிறது.

அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய வழிகாட்டல் குழுவில், தயாரிக்கப்பட்ட இடைக்கால வரைபு பற்றிய தத்தமது நிலைப்பாடுகளை முன் வைப்பதில் கட்சிகள் இடையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இனிமேலும் இதை தள்ளி வைக்க முடியாது. குறிப்பாக அதிகாரப்பகிர்வு, தேர்தல் முறைமை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஆகியவை தொடர்பாக உங்கள் நிலைப்பாடுகளை வழிகாட்டல் குழுவுக்கு அறிவியுங்கள்.

பெரும்பான்மை கட்சிகளின் அரசியல் இழுபறிகளுக்கு தமிழ் பேசும் மக்கள் இனியும் பலிக்கடா ஆக முடியாது. புதிய அரசியலைமைப்புக்கு தயாரில்லை என்றால் அரசியலமைப்பு பேரவையை கலைத்து விட்டு இனப்பிரச்சினை தீர்வுக்கு எதுவும் தர தயாரில்லை என அகில உலகத்துக்கும் அறிவித்து விடுங்கள்.

இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு விடும் என்று தமிழ் மக்களை இனிமேலும் நம்ப வைத்து இழுபறிப்பட இடமளிக்க முடியாது. இதற்கு நாம் பங்காளிகளாக இருக்கவும் முடியாது.

அதிகாரப்பகிர்வு, தேர்தல் முறைமை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு, மொழியுரிமை, மத உரிமை, தேசியகீதம் ஆகிய ஏழு விடயங்கள் தொடர்பாக, வழிகாட்டல் குழுவில் இடம்பெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.

இந்த நான்கு கட்சிகளும் இணைந்து தயாரிக்கும் ஒரு கூட்டு அறிக்கையை, வழிகாட்டல் குழுவுக்கு சமர்பிக்க நாம் முடிவு செய்துள்ளோம்.

இது தொடர்பிலான எங்கள் வரைபு தயாரிக்கப்பட்டு நான்கு கட்சிகள் மத்தியிலும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. எமது இறுதி அறிக்கை, அடுத்த வழிகாட்டல் குழு கூட்டத்துக்கு சமர்பிக்கப்படும்.

கடைசியாக நடைபெற்ற வழிகாட்டல் குழுவின் முடிவின்படி, இம்மாதம் 9,10,11ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த அரசியலமைப்பு பேரவை விவாதங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

அத்துடன் பெப்ரவரி மாதம் முதல் வாரத்துக்குள் அனைத்து கட்சிகளும் தத்தம் நிலைப்பாடுகளை அறிவிக்க உடன்பாடு ஏற்பட்டது. எனவே இந்த காலகட்டத்துக்குள் உங்கள் நிலைப்பாடுகள் வழிகாட்டல் குழுவுக்கு சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

பொலிஸார் உட்பட 21 பேருக்கு படுகாயம் – ஹம்பாந்தோட்டையில் கடுமையான மோதல்..

Next Post

ஜனாதிபதி மைத்திரி – ஆந்திர முதல்வர் சந்திப்பு

Next Post
ஜனாதிபதி மைத்திரி – ஆந்திர முதல்வர் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரி - ஆந்திர முதல்வர் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : ஐ.எம்.எப்பிற்கு அநுர அறிவிப்பு

May 31, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

May 31, 2026
18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures