உலக அரங்கை கலக்கும் இலங்கையின் நம்பர் ஒன் கார் பந்தைய வீரர்!
பிரபல கார் பந்தைய வீரரான Ashan de Silva துபாயில் நடக்கும் சர்வதேச கார்ப் பந்தைய போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொள்ள உள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அபுதாபியில் இடம்பெற்ற ‘Yaas Marina’ கார்பந்தையத்தில் Ashan de Silva முதல் மற்றும் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து 2 மாதங்கள் கழித்து நடந்த NGK 2 hour போட்டியிலும் Hameed Al Hammadi உடன் இணைந்து வெற்றி பெற்று இலங்கைக்கு பெருமை தேடித் தந்தார்.
இதனால் Ashan de Silva இலங்கையின் நம்பர் ஒன் மோட்டார் கார் டிரைவர் என்ற பெருமையோடு, தேசிய விருதையும் பெற்றார்.
இது தவிர, Foxhill Supercross, Gunner Supercross, Gajaba Supercross, Katukurunda Circuit Meet, Pannala Circuit Meet, Cavalry Supercross, Sigiriya Rally Cross, Walawa Supercross மற்றும் Carlton Supercross என அனைத்திலும் பிரகாசித்தார்.
தற்போது எதிர்வரும் 12ம் திகதி முதல் 14 திகதி வரை துபாயில் நடக்கும் சர்வதேச கார்ப் பந்தைய போட்டியில் Ashan de Silva பங்கேற்கவுள்ளார்.