கனடா மொன்றியலில் வயோதிபர் இல்லத்தில் தீ: பெண் உயிரிழப்பு
மொன்றியலில் வயோதிபர் இல்லமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் ஏற்பட்ட தீயை அடுத்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் மூவர் மூச்சுத் திணரலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அனர்த்தத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அது குறித்த விசாரணைகளுக்காக புலனாய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.