தாய் இருபிள்ளைகள் உட்பட்ட நால்வரின் உயிரை பலி கொண்ட வீட்டு தீ?
கனடா-ஒன்ராறியோவின் தென் மேற்கு பகுதியில் 37 வயது மற்றும் 83-வயது பெண்கள் மற்றும் வயது 2 மற்றும் 15வயதுடைய பிள்ளைகள் இருவரினதும் உயிர்களை அதிகாலை தீ பலிகொண்டுள்ளது.
போர்ட்கொல்போர்ன் என்ற இடத்தில் ஏற்பட்ட தீயின் பேரழிவினால் நால்வரின் உயிர்கள் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் புதன்கிழமை அதிகாலை 1.30மணியளவில் நிக்கெல் வீதி கிழக்கில் நடந்துள்ளது.
83-வயது பெண் ஒருவர் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. 37வயதுடைய தாய் ஒருவர் இவரது இரண்டு வயது மகன் மற்றும் 15வயது மகள் ஆகியவர்களும் தீயினால் கொல்லப்பட்டனர்.விபத்து நடந்த சமயம் இவர்கள் வீட்டிற்குள் இருந்துள்ளனர்.
தீயின் ஆகிருதி காரணமாக காரணமாக போட் கொல்போர்ன தீயணைப்பு சேவைகள், நயாகரா பிரதேச பொலிஸ், நயாகரா அவசர மருத்துவ சேவையினர் மற்றும் வெலன்ட் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் சம்பவ இடத்தில் காணப்பட்டனர்.
அனைவரும் சென்றடைந்த நேரத்தில் தீயின் ஆக்ரோசம் மிக மோசமாக காணப்பட்டது. 83வயது முதியவரை தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் இருந்து வெளியே கொண்டுவந்த போதிலும் அவர்களால் இவரை காப்பாற்ற முடியவில்லை.
பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.புலன் விசாரனை தொடர்கின்றது.

AppleMark
616 total views, 303 views today
– See more at: http://www.canadamirror.com/canada/76238.html#sthash.gid6pXQL.dpuf