பான் இந்திய நட்சத்திர நடிகரான தனுஷ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘தேரே இஷ்க் மே’ எனும் திரைப்படத்தின் டீசர் தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தேரே இஷ்க் மே’ எனும் திரைப்படத்தில் தனுஷ் – கீர்த்தி சனோன் ஆகிய இருவரும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ‘நடனப்புயல்’ பிரபுதேவா சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார்.
கதாசிரியர்கள் ஹிமான்ஷூ சர்மா – நீரஜ் யாதவ் இணைந்து கதை எழுத, ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இசையில் காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் ஆனந்த் எல் ராய்- ஹிமான்ஷூ சர்மா – பூஷன் குமார் – கிருஷண்குமார்- ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பெறும் காட்சிகள் தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதால் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.