Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இறக்கப்போவதை முன்பே தெரிந்து கொண்டாராம் ஜெயலலிதா? என்ன சொன்னார் தெரியுமா

December 8, 2016
in News
0
இறக்கப்போவதை முன்பே தெரிந்து கொண்டாராம் ஜெயலலிதா? என்ன சொன்னார் தெரியுமா

இறக்கப்போவதை முன்பே தெரிந்து கொண்டாராம் ஜெயலலிதா? என்ன சொன்னார் தெரியுமா

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இறந்தது இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும், மற்ற தலைவர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.

இவ்வளவு ஏன் சென்னை வந்திருந்த ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணி நேற்று நடந்த மரண சம்பவத்தை கேள்விப்பட்டிருக்கிறார்.

மருத்துவமனை முன்பும், ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்தவர்களையும், ஆங்காங்கே கூடி குமுறி அழுதவர்களையும் பார்த்து அவர், ஒரு அரசியல் தலைவர் மேல் மக்கள் இவ்வளவு, பாசமும், மதிப்பும் வைத்துள்ளார்களா என ஆச்சர்யப்பட்டாராம்.

ஆனால் ஜெயலலிதாவை பற்றிய சில முக்கிய தகவல்கள்….

புகை பிடிக்க கடும் தடை

புகை பிடிப்பது அவருக்கு பிடிக்கவே பிடிக்காதாம். போயஸ் கார்டன் கட்டியதிலிருந்து இன்றுவரை அங்கு புகை பிடிக்க கடும் தடை விதித்தாராம்.

வேலை பார்ப்பவர்கள் மட்டுமின்றி அவரை சந்திக்க எந்த அதிகாரிகள் வந்தாலும் அந்த வளாகத்தில் புகைபிடிக்க தடையாம்.

இங்கு தான் டென்ஷன் பிரீ

அவ்வப்போது கொடநாடு பங்களாவிற்கு செல்வதற்கு காரணம் அங்குள்ள அமைதி தானாம். இங்கு வந்தால் தான் எனக்கு டென்ஷன் பிரீ யாக இருக்கிறது என ஊட்டி மக்களிடம் கூறுவாராம்.

நடைபயிற்சியை விட்டது

மருத்துவர்கள் பலமுறை இவரிடம் நடைப்பயிற்சி செய்ய அறிவுறுத்துவார்களாம். ஆனால் வேலைப்பளுவின் காரணமாக அதை தவிர்த்து விடுவாராம்.

ஓய்வுக்காக கொடநாடு போகும்போது மட்டுமே நடைபயிற்சி எடுத்துக்கொள்வாராம்.

தமிழ் மீது அக்கறை

தான் நிர்வகித்து வரும் சானலில் செய்திவாசிப்பாளர்கள் பேசுவதை தொடர்ந்து பார்ப்பாராம். அதிலும் ஒவ்வொரு வார்த்தைகளையும் அவர்கள் எப்படி உச்சரிக்கிறார்கள் என கண்காணிப்பாராம். பிழைகள் இருந்தால் அப்படி அல்ல அதை இப்படிதான் முறையாக உச்சரிக்க வேண்டும் என சொல்லிக்கொடுப்பாராம்.

ஆங்கில நாவல்கள்

தமிழுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் அவர் ஆங்கில நாவல்களை அதிகம் படிப்பாராம்.

அப்போதே தமிழில் சில நாவல்களை எழுதியுள்ளார்.

ஜோதிடம், காலம், இயற்கையை நம்பியது

அறிவியல் ரீதியாக பல விஷயங்களை தெரிந்து வைத்திருந்தாலும் எப்போதும் அப்போதைய ஜோதிட சாஸ்திர கணிதத்துக்கு முக்கியம் கொடுப்பாராம்.

மரணத்தை முன்கூட்டியே சொன்னது

ஜெயலலிதா தன் தோழி சசிகலாவிடம் அடிக்கடி தன் குடும்பத்தில் அம்மா, அப்பா, அண்ணா என யாரும் 60 வயதுக்கு மேல் யாரும் இருந்ததில்லை.

நான் தான் அதற்கு மேல் இருக்கிறேன் என கூறியவர், தன் உடலை எம்.ஜி.ஆர் சமாதி அருகே தான் புதைக்க படவேண்டும் என கூறிஇருந்தாராம்.

இப்படி தான் சடங்கு முறைகள் செய்யப்படவேண்டும் என சொல்லிவிட்டு தான் மறைந்தாராம்.

Jayalalithaa – Born Leader from Actress
Actor Vijay Pays Last Respect to Jayalalithaa at Funeral
Tags: Featured
Previous Post

சோ உடல் தகனம்! பிரபலங்கள் அஞ்சலி

Next Post

ஜெயலலிதாவின் மரணத்தின் போது தமிழ் நாட்டில் நிகழ்ந்த அதிசயம்! ஜெயா நினைத்தது நடந்ததா?- இது தான் தமிழனின் குணம்

Next Post
எம்.ஜி.ஆர் போல் கைக்கடிகாரத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா

ஜெயலலிதாவின் மரணத்தின் போது தமிழ் நாட்டில் நிகழ்ந்த அதிசயம்! ஜெயா நினைத்தது நடந்ததா?- இது தான் தமிழனின் குணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures