Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒளிந்து திரியும் ராஜித: சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

August 14, 2025
in News
0
ஒளிந்து திரியும் ராஜித: சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தொடர்ந்து தலைமறைவாக இருப்பதனால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பெற லஞ்ச ஊழல் ஆணைக்குழு தயாராகி வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ராஜித சேனாரத்னவை கைது செய்து முன்னிலைப்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் 

கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவினால் கடந்த 12ஆம் திகதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஒளிந்து திரியும் ராஜித: சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை | Rajitha S Property Is Confiscated

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வு வேலைகளை சட்டவிரோதமாக கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் மூலம் 262 லட்சம் ரூபா இழப்பை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க வருமாறு ஆணைக்குழுவினால் பல்வேறு தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு காரணங்களை முன்வைத்து ராஜித சேனாரத்ன வாக்குமூலம் வழங்குவதற்கு வருகை தரவில்லை.

இந்நிலையில், விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த வாதங்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில், தற்போது அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய லஞ்ச ஊழல் ஆணைக்குழு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கூலி – திரைப்பட விமர்சனம்

Next Post

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : நாளை வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

Next Post
மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : நாளை வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : நாளை வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures