Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

,நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு வந்தவர்கள் மோதல்: கருணாஸ் கார் கண்ணாடி உடைப்பு போலீசார் தடியடி; 20 பேர் கைது

November 29, 2016
in Cinema, News
0
,நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு வந்தவர்கள் மோதல்: கருணாஸ் கார் கண்ணாடி உடைப்பு போலீசார் தடியடி; 20 பேர் கைது

நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு வந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு அடிதடி, ரகளை நடந்தது. நடிகர் கருணாசின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. போலீசார் தடியடி நடத்தி, ரகளையில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்யப்பட்டனர்.

நடிகர் சங்க பொதுக்குழுதென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை லயோலா கல்லூரியில் நடத்தப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் தியாகராயர்நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்துக்கு மாற்றப்பட்டது. கல்லூரிக்கு மிரட்டல் வந்ததாலும், போலீஸ் அனுமதி மறுத்ததாலும் இட மாற்றம் செய்யப்பட்டது. திட்டமிட்டபடி நடிகர் சங்கத்தின் பொதுக்குழு நேற்று மதியம் 2 மணிக்கு நடிகர் சங்க வளாகத்தில் கூடியது. இதற்காக அங்கு உள்ள காலிமனையில் சாமியனா பந்தல் அமைத்து, நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

அதன் முன்னாள் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், தியாகராஜபாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, ஜெமினி கணேசன், நாகேஷ், சாவித்திரி உள்பட மறைந்த நடிகர்–நடிகைகளின் உருவப்படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டிருந்தது. நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.  பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, சச்சு ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.

கைகலப்புமுன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோருக்கு அழைப்பு இல்லை. அவர்களுடைய ஆதரவாளர்கள் கருப்புச்சட்டை அணிந்து பொதுக்குழுவுக்கு வந்திருந்தனர். நடிகர் சங்க உறுப்பினர் அடையாள அட்டையும், அழைப்பிதழும் வைத்திருந்தவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நடிகர் சங்க நுழைவுவாயிலில் போலீசாரும், தனியார் பாதுகாவலர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர். கூட்டம் தொடங்கியதும் அழைப்பிதழ் இல்லாத சிலர் உள்ளே நுழைய முயற்சி செய்தனர்.

வாசலில் இருந்தவர்கள் அழைப்பிதழ் இருந்தால் தான் அனுமதிக்க முடியும் என்று தடுத்து நிறுத்தினார்கள். இந்தநிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளினார்கள். திடீரென்று பயங்கரமாக கைகலப்பில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடிகர் கருணாசின் கார் கண்ணாடியை சிலர் கல்வீசி உடைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் தகராறில் ஈடுபட்டவர்கள் மீது லேசான தடியடி நடத்தி அங்கிருந்து கலைத்தனர்.

20 பேர் கைதுபின்னர் ரகளையில் ஈடுபட்டதாக 19 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். பதற்றமான சூழ்நிலை நிலவியதை தொடர்ந்து அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்தநிலையில் தனது கார் உண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக கருணாஸ் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆவடியை சேர்ந்த பிரபு என்பவரை கைது செய்தனர்.

கருணாஸ் தனது ஆதரவாளர்களை ஏவி தன்னை தாக்கியதாக பிரபுவும் தனியாக புகார் அளித்துள்ளார்.

Previous Post

பிரபல நடிகை பரிதாபமாக கொலையான சம்பவம்! வெறியர்கள் யார்

Next Post

நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கம் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

May 31, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures