“நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தேன்”.குயின் எலிசபெத்தினால் கௌரவிக்கப்பட்ட கனடிய வாலிபன்

“நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தேன்”.குயின் எலிசபெத்தினால் கௌரவிக்கப்பட்ட கனடிய வாலிபன்

18வயது வாலிபன் ரெயிலர் பெய்லர் தான் திடீரென பாய்ந்து தனது மாற்றாந் தந்தையின் உயிரை காப்பாற்றுவான் என நினைக்கவில்லை. அதே போன்று மகாராணியாரை சந்திப்பான் என்றும் நினைக்கவில்லை. ஆனாலும் இரண்டுமே நடந்துள்ளது.
செவ்வாய்கிழமை அல்பேர்ட்டா வெற்றாஸ்கிவினை சேர்ந்த வாலிபன் குயின் எலிசபெத்தை பக்கிங்காம் அரண்மனையில் சந்தித்தான். 2015ல் நடந்த இவனது வீரதீர செயலிற்காக அரசியார் Russell Award விருதை வழங்கி இவனை கௌரவ படுத்தினார்.
இதயதசை நோயினால் பாதிக்கப்பட்ட இவனது மாற்றாந்தந்தை இதய துடிப்பு நின்று விட்டதால் சரிந்து விழுந்து விட்டார்.
இதனை அறிந்த ரெய்லர் உடனடியாக CPR சிகிச்சையை தொடங்கி–அம்புலன்ஸ் வரும் வரை தொடர்ந்து 10நிமிடங்கள் செய்துள்ளான்.
இவன் ஆறு வயதாக இருக்கும் போதே உயிர் காப்பது இவனின் வாழ்நாள் ஆர்வமாக இருந்துள்ளது. அப்போதே இவனது பெற்றோர் உயிர்காக்கும் விளையாட்டில் இவனை சேர்த்து விட்டனர்.
இந்த விளையாட்டு சர்வதேச போட்டிகளிற்காக இவனை ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளிற்கும் அண்மையில் இட்டு சென்றது.
தனது கணவரின் உயிரை மகன் காப்பாற்றுவான் என தாயார் நினைக்கவில்லை.
ரெய்லரின் முதலுதவி மாற்றாந்தந்தையின் உயிரை காப்பாற்றியதாக வைத்தியசாலையில் தெரிவித்தனர். உடல் நல மருத்துவ நிபுணர்கள் பலர் இந்த முதலுதவி செய்தவர் யாரென அதிசயித்தனர்.முதல் தடவையாக மிகவும் திறம்பட-அதுவும் குடும்ப அங்கத்தவர் ஒருவருக்கு-நிர்வகிப்பது அசாத்தியம் எனவும் தெரிவித்தனர்.
18-வயதான ரெய்லர் பெய்லர் செவ்வாய்கிழமை இரவு மகாராணி எலிசபெத்தை பக்கிங்காம் மாளிகையில் சந்தித்து தனது மாற்றாந்தந்தையின் உயிரை காப்பாற்றியதற்காக உயிர் காக்கும் பொறுப்பில் பயிற்சி பெற்று திறம்பட செயலாற்றுபவர்களிற்கு வழங்கும் விருதான Russell Award விருதை வழங்கினார்.

award3

award1award2

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News