Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜெவ்னா கிங்ஸ் – கோல் க்ளடியேட்டர்ஸ் போட்டியுடன் 3ஆவது எல்பிஎல் அத்தியாயம் இன்று ஆரம்பம்

December 6, 2022
in News, Sports
0
லங்கா பிறீமியர் லீக் 3 ஆவது அத்தியாயம் ஜூலை 31 இல் ஆரம்பம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3ஆவது லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்)  இருபது 20 கிரிக்கெட் அத்தியாயம் ஹம்பாந்தோட்டையில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் அணிக்கும் உப சம்பியன் கோல் க்ளடியேட்டர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியைத் தொடர்ந்து கலம்போ ஸ்டார்ஸ் அணிக்கும் கண்டி வொரியர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி இரவு மின்னொளியில் நடைபெறும்.

லங்கா பிறீமியர் லீக்கில் 5ஆவது அணியாக தம்புள்ள ஜயன்ட்ஸ் பங்குபற்றுகிறது.

கடந்த இரண்டு அத்தியாயங்களும் ஹம்பாந்தோட்டையில் மாத்திரம் நடத்தப்பட்ட போதிலும் இந்த வருடம் மூன்று இடங்களில் 3ஆவது அத்தியாயம் இரண்டு சுற்றுகள் கொண்ட லீக் அடிப்படையில் நடைபெறவுள்ளது.

முதலாம் கட்டமாக ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று முதல் சனிக்கிழமை வரை 6 போட்டிகள் நடைபெறவுள்ளன.

அதன் பின்னர் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் டிசம்பர் 11ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதிவரை 8 போட்டிகள் நடத்தப்படும்.

கடைசிக் கட்டமாக கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் டிசம்பர் 17ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதிவரை 6 போட்டிகள் நடத்தப்படும்.

லீக் சுற்று முடிவடைந்ததும் இறுதிச் சுற்று போட்டிகளும் ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறும்.

முதலாவது தகுதிகாண் போட்டியும் நீக்கல் போட்டியும் டிசம்பர் 21ஆம் திகதியும் இரண்டாவது தகுதிகாண் போட்டி 22ஆம் திகதியும் லங்கா பிறீமியர் லீக்கின் 3ஆவது சம்பியனைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப் போட்டி 23ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

ஜெவ்னா கிங்ஸ் எதிர் கோல் க்ளடியேட்டர்ஸ்

முதலிரண்டு அத்தியாயங்களில் சம்பியனான ஜெவ்னா கிங்ஸ் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியில் கோல் க்ளடியேட்டர்ஸ் அணியை சந்திக்கவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் கடந்த இரண்டு அத்தியாயங்களிலும் இறுதிப் போட்டியில் சந்தித்துக்கொண்டபோது திசர பெரேரா தலைமையிலான ஜெவ்னா கிங்ஸ் வெற்றிபெற்று சம்பியனாகியிருந்தது.

இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட 7 சந்தர்ப்பங்களில் 4 – 3 என்ற ஆட்டங்கள் கணக்கில் ஜெவ்னா கிங்ஸ் முன்னிலையில் இருக்கிறது.

முதலாவது அத்தியாயத்தில் ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் என்ற பெயரில் சம்பியனான அவ்வணியின் உரிமையாளர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காணரமாக அவ்வணியின் பெயர் இரண்டாவது அத்தியாயத்தில் மாற்றப்பட்டு ஜெவ்னா கிங்ஸ் என்ற பெயரில் போட்டியிடுகிறது.

ஜெவ்னா கிங்ஸ் அணியின் உரிமையாளராக லைக்காமொபைல் நிறுவனத்தின்  ஸ்தாபகரும் உரிமையாளருமான சுபாஸ்கரன் அல்லிராஜா செயற்படுகிறார்.

எல்.பி.எல். கிரிக்கெட்டில் 3ஆவது தொடர்ச்சியான தடவையாகவும் சம்பினாவதைக் குறிக்கோளாகக் கொண்டு ஜெவ்னா கிங்ஸ் அணியின் முகாமைத்துவ அதிகாரிகளும் விரர்களும் இவ் வருட எல்.பி.எல். போட்டிகளை எதிர்கொள்ளவுள்ளனர்.

இதனை முன்னிட்டு அதிசிறந்த உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்களை ஜெவ்னா கிங்ஸ் தெரிவு செய்துள்ளது. அத்துடன் ஜெவ்னா கிங்ஸ் அணியில் மாத்திரமே வட மாகாணத்தைச் சேர்ந்த வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் அணித் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த்  அதே கல்லூரியின் முன்னாள் வீரர் தீசன் விதுஷன், சென். ஜோன்ஸ் கல்லூரியின் முன்னாள் வீரர் தெய்வேந்திரம் டினோஷன் ஆகியோர் ஜெவ்னா கிங்ஸ் அணியில் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.

அவர்களில் சுழல்பந்துவீச்சாளரான விதுஷன் 10 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 46 விக்கெட்களைக் கைப்பற்றி தனது திறமையை வெளிப்படுத்திருந்தார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முதல் சந்தர்ப்பத்திலேயே 21 வயதான விதுஷன் 40க்கும் மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தியமை பாராட்டுக்குரியதாகும். ஜெவ்னா கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

வியாஸ்காந்த், 6 எல்பிஎல் போட்டிகளில் ஜெவ்னா கிங்ஸ் சார்பாக விளையாடி 7 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். இலங்கையின் முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸின் விக்கெட்டே அவர் வீழ்த்திய முதலாவது விக்கெட்டாகும்.

டினோஷனும் ஜெவ்னா கிங்ஸ் அணிக்காக இதுவரை விளையாடியதில்லை.

ஜெவ்னா கிங்ஸ் குழாம்

திசர பெரேரா (தலைவர்), தனஞ்சய டி சில்வா, தெய்வேந்திரம்   டினோஷன், பினுர பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, அவிஷ்க பெர்னாண்டோ, ஜேம்ஸ் ஃபுல்லர், ப்ரவீன் ஜயவிக்ரம, டொம் கோலர் கெட்மோர், சுமிந்த லக்ஷான், டில்ஷான் மதுஷன்க, ஜேம்ஸ் நீஷாம், நிப்புன் தனஞ்சய, ரஹ்மானுல்லா குர்பாஸ், அஷான் ரந்திக்க, சதீர சமரவிக்ரம, ஷொயெப் மாலிக், மஹீஷ் தீக்ஷன, தீசன் விதுஷன், விஜயகாந்த் வியாஸ்காந்த், வக்கார் சலாம்கீல், துனித் வெல்லாலகே.

கோல் க்ளடியேட்டர்ஸ் குழாம்

குசல் மெண்டிஸ் (தலைவர்), அன்வர் அலி, அசாத் ஷபிக், சம்மு அஷான், அஸாம் கான், சச்சிந்து கொலம்பகே, நுவன் ப்ரதீப், நுவனிது பெர்னாண்டோ, லக்ஷான் கமகே, இப்திகார் அஹ்மத், இமாத் வசிம், தரிந்து கௌஷால், நிப்புல் மாலிங்க, மொஹமத் ஹஸ்நய்ன், குசல் ஜனித் பெரேரா, லக்ஷான் சந்தகேன், மொவின் சுபசிங்க, புல்லின தரங்க, நுவான் துஷார, நிமேஷ் விமுக்தி.

கலம்போ ஸ்டார்ஸ் குழாம்

ஏஞ்சலோ மெத்யூஸ் (தலைவர்), சரித் அசலன்க, சமோத் பட்டகே, ரவி பொப்பாரா, தினேஷ் சந்திமால், நிரோஷான் திக்வெல்ல, டொமினிக் ட்ரேக்ஸ், நிஷான் மதுஷன்க, பெனி ஹொவெல், இஷான் ஜயரட்ன, கரிம் ஜனத், கெவின் கொத்திகொட, சத்துரங்க குமார, சுரங்க லக்மால், தனஞ்சய லக்ஷான், முடித்த லக்ஷான், லக்ஷித்த மனசிங்க, நவீன் உல் ஹக், நவோத் பரணவித்தான, சீக்குகே ப்ரசன்ன, கசுன் ராஜித்த, ரொமாரியோ ஷெப்பர்ட், ஜெவ்றி வெண்டர்சே.

கண்டி வொரியர்ஸ் குழாம்

வனிந்து ஹசரங்க டி சில்வா (தலைவர்), லசித் அபேரட்ன, அஹ்மத் தானியல், ஃபேபியன் அலன், அஷேன் பண்டார, கவின் பண்டார, மினோத் பானுக்க, கார்லோஸ் ப்ரத்வெய்ட், அஷேன் டெனியல், அண்ட்ரே ஃப்லெச்சர், சாமிக்க கருணாரட்ன, ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், நஜிபுல்லா ஸத்ரான், பெத்தும் நிஸ்ஸன்க, மதீஷ பத்திரண, அவிஷ்க பெரேரா, அஷான் ப்ரியஞ்சன், மலிந்த புஷ்பகுமார, ஒஷேன் தோமஸ், இசுறு உதான, சமிந்து விஜேசிங்க.

தம்புள்ள ஜயன்ட்ஸ் குழாம்

தசுன் ஷானக்க (தலைவர்), டொம் ஆபெல், ஜோர்டான் கொக்ஸ், லசித் குரூஸ்புள்ளே, ஷெவான்ன் டெனியல், சத்துரங்க டி சில்வா, ரவிந்து பெர்னாண்டோ, ஹய்தர் அலி, துஷான் ஹேமன்த, சச்சித்த ஜயதிலக்க, லஹிரு குமார, லஹிரு மதுஷன்க, ரமேஷ் மெண்டிஸ், நூர் அண்மத், கலன பெரேரா, ப்ரமோத் மதுஷான், பானுக்க ராஜபக்ஷ, தரிந்து ரட்நாயக்க, சிக்கந்தர் ராஸா, டிலும் சதீர, போல் வன் மீக்கெரென், சமிந்து விக்ரமசிங்க.

Previous Post

இந்தியாவிடமிருந்து இலங்கை பாடம் கற்கவேண்டும் | பரமேஸ்வரன் ஐயர்

Next Post

தோழியின் முன்னாள் கணவரை கரம்பிடித்த ஹன்சிகா

Next Post
தோழியின் முன்னாள் கணவரை கரம்பிடித்த ஹன்சிகா

தோழியின் முன்னாள் கணவரை கரம்பிடித்த ஹன்சிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures