கனடாவில் உலகின் உயரமான கட்டடம்

கனடாவில் உலகின் உயரமான கட்டடம்

தற்போதைய நிலையில் உலகின் உயரமான கட்டடம் துபாயில் உள்ள புர்ஜ் கலிபா. இது 2,723 அடி உயரம் கொண்டது. அதை விட உயரமான கட்டடம் உலகில் எங்கோ கட்டப்பட்டுள்ளதா என நினைக்க வேண்டாம்.

கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் கட்டுமானப்பொருட்களை பயன்படுத்தாமல், மரப் பொருட்களைக் கொண்டு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 174 அடி உயரம் கொண்ட இக்கட்டடம் உலகின் உயரமான மர கட்டடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் தான் இந்த கட்டடம் கட்டப்
பட்டுள்ளது. இதன் உயரம் 174 அடி. 18 மாடிகளைக் கொண்டுள்ளது. இதற்கான செலவு 340 கோடி ரூபாய்.இந்த மரத்திலான கட்டடம் 70 நாட்களில் கட்டப்பட்டுள்ளது. மற்ற கட்டுமான வகையை விட 18 சதவீதம் விரைவாக இக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

ஏன் மரம்

மரப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளதால் எப்போதும் வேண்டுமானாலும் இதன் வடிவ மைப்பை மாற்றிக்கொள்ளலாம். அதே நேரத்தில் உறுதியானதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற கட்டுமான பொருட்களுடன் ஒப்பிடும் போது, இந்த மரப்பொருட்களான கட்டத்தால் 2,432 டன் கார்பன்-டை-ஆக்சைடு அளவு (அதாவது ஆண்டுக்கு 500 கார்கள் வெளியிடும் கார்பனின் அளவு) குறைக்கப்பட்டுள்ளது.

விடுதி

70 சதவீதம் மர பைபரால் ஆன பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த கட்டடம் மாணவர் விடுதியாக பயன்படுத்தப்பட உள்ளது. 400 மாணவர்கள் தங்கும் அளவுக்கு கட்டப்
படுகிறது.

எப்போது

வெளிப்புற கட்டுமானப் பணி முடிந்து தற்போது உள்பக்க வடிவமைப்பு பணிகள் நடந்து
கொண்டிருக்கின்றன. 2017 மே மாதம் இந்த கட்டடம் பயன்பாட்டுக்கு வரும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அடுத்த கல்வியாண்டில் 400 மாணவர்கள் இந்த புதிய கட்டடத்தில் தங்கும் வாய்ப்பை பெறுகின்றனர்.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News