Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சீர்திருத்தப்பட்ட நிறைவேற்று அதிகார முறைமையே தமிழர்களுக்கு அவசியம் : தயான்

May 1, 2022
in News, Sri Lanka News
0
சீர்திருத்தப்பட்ட நிறைவேற்று அதிகார முறைமையே தமிழர்களுக்கு அவசியம் : தயான்

சீர்திருத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது தமிழர்களின் பாதுகாப்புக்கு அவசியமானதாகும் என்று தெரிவித்துள்ள கலாநிதி.தயான் ஜயதிலக்க, இனவாதம், பிரிவினைவாதம், உள்நாட்டுப் போர் ஆகியவற்றின் கருப்பை பாராளுமன்ற முறைமையாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தினை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்வாக்குச் செலுத்தவல்ல எதிரணி தற்போது நிறைவேற்று அதிகார ஜனதிபதி முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்து கோசங்களை எழுப்ப ஆரம்பித்துள்ளன.

உண்மையிலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை சீர்திருத்துவதற்கு பதிலாக அதனை ஒழிப்பதற்கான முழகத்தை இட்டுவருகின்றன.

இலங்கையின் பிரகாசமான எதிர்காலத்தைப் பறித்த கொள்கைகளும் அனைத்து அடிப்படைத் தவறுகளும் வெஸ்ட்மின்ஸ்டர் முறைமையை அடியொற்றிய பாராளுமன்ற ஆட்சி முறைமையின் கீழாகவே நடைபெற்றுள்ளன.

குறிப்பாக, பாராளுமன்ற முறைமை மூலமே,  1931ஆம் ஆண்டு முதல் தேர்தல்களில் வாக்களித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலைநாட்டு மக்கள் வாக்குரிமை மறுக்கப்பட்டனர். 1953 இல் முதல் வெகுஜன எழுச்சியும் காவல்துறை துப்பாக்கிச் சூடுகளும் (8பேர் இறந்தனர்) நடைபெற்றன.

லீ குவான் யூ இலங்கைத் தீவின் பூர்வீக பாவம் என்று அடையாளப்படுத்திய சிங்களம் மட்டும் கொள்கையானது 1956 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பண்டாரநாயக்கா – செல்வநாயகம் உடன்படிக்கை 1957 ஆம் ஆண்டு இரத்துச் செய்யப்பட்டு கிழித்தெறியப்பட்டது.

பொதுத்துறையில் தேர்ச்சிக்கான பரீட்சைகள், பாடசாலைகளில் பயிற்றுவிக்கும் முறை மாற்றம், பாடசாலைகளை மத்திய அரசின் கீழ் கையகப்படுத்தல், பல்கலைக்கழக நுழைவுத் தரப்படுத்தல் கொள்கை ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டன.

ஜே.வி.பி.யின் 1971 கிளர்ச்சி மற்றும் அதன் இரத்தக்களரி ஒடுக்குமுறை சுதந்திரமான பொதுச்சேவை ஆணைக்குழு ஒழிக்கப்பட்டமை, அரச நிர்வாகத்தை அரசியல்வாதிகளுக்கு அடிபணியச் செய்யப்பட்டமை, சிங்களத்திற்கான அரசியலமைப்பு அந்தஸ்து, பௌத்த மதத்திற்கு முதலிடம் ஆகியனவும் ஏற்படுத்தப்பட்டன.

1972 இல் தமிழ்ப் புதிய புலிகளின் உருவாக்கும், 1976 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் உருவாக்கம், 1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஆகியனவும் பாராளுன்ற முறைமையின் கீழேயே இடம்பெற்றன.

இவ்வாறிருக்கையில், ஜனாதிபதி முறைமையின் கீழாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக மக்களின் வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டமை, மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வுக்கான 13 ஆவது திருத்தச்சட்டம் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை, 200 ஆடைத் தொழிற்சாலைகள் வேலைத்திட்டம் போன்ற ஏற்படுத்தப்பட்டன.

ஆகவே, ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் முயற்சியானது, பொருத்தமற்றது. மாறாக, எதேச்சதிகார ஜனாதிபதி முறை சீர்திருத்தப்பட்டு நிறைவேற்று அதிகாரக முறைமை நீடிக்க வேண்டும் என்றார்.

 

Previous Post

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சமையல் எரிவாயு

Next Post

இலங்கை வந்த விமானத்தில் நடுவானில் அவமதிக்கப்பட்ட ராஜபக்ஷ குடும்பம்

Next Post
எனது மகனைக் கைது செய்தவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்

இலங்கை வந்த விமானத்தில் நடுவானில் அவமதிக்கப்பட்ட ராஜபக்ஷ குடும்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures