Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கும் தமிழ் தொடர்கள்

April 30, 2022
in Cinema, News
0
டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கும் தமிழ் தொடர்கள்

கொரோனாத் தொற்றுக் காலகட்டத்தில் மக்களின் பொழுதுபோக்கிற்காக கைக்கொடுத்ததால் டிஜிட்டல் தளத்திற்கான ஆதரவு பெருகி வருகிறது. தங்களின் சந்தாதாரர்களையும், புதிய வாடிக்கையாளர்களையும் கவர்வதற்காக முன்னணி டிஜிட்டல் நிறுவனங்கள் புதிய படைப்புகளை தயாரித்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அமேசான் ப்ரைம் டிஜிட்டல் தளம் விரைவில் நான்கு புதிய தமிழ் தொடர்களை வெளியிடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

சுழல், தி வில்லேஜ், வதந்தி, மாடர்ன் லவ் சென்னை என நான்கு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் வெளியாகின்றன. இதில் மொடர்ன் லவ் சென்னை என்ற படத்தில் மாநகரத்தின் தனித்துவமான சூழலில் வாழும் ஆறு வெவ்வேறு நபர்களைப் பற்றிய காதலை ஆராய்கிறது. ஆரண்யகாண்டம், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தெரிவு செய்த இந்த படைப்புகளை இயக்குநர்கள் பாலாஜி தரணீதரன்,ராஜு முருகன், ப்ரதீப் குமார் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

நடிகர்கள் கிஷோர், அசோக் செல்வன், நடிகைகள் ரம்யா நம்பீசன், ரிது வர்மா, விஜயலட்சுமி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதனை பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ரமா குமார், அக்சய் சுந்தர் ஆகியோர் இயக்கி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து ‘சுழல்’ என்ற பெயரில் ‘விக்ரம் வேதா’ புகழ் இயக்குநர் புஷ்கர் & காயத்ரி தயாரித்திருக்கும் படைப்பு வெளியாகிறது. ஒரு சிறிய நகரம் ஒன்றில் காணாமல் போகும் ஒரு எளிய மனிதனைக் கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் பயணத்தை மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கி இருக்கிறார்கள். இதில் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, அவர்களுடன் கதிர், ஆர். பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து ‘ஸ்வீட் காரம் கோப்பி’ என்ற பெயரில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் தங்களின் அனுபவத்தை சாலை பயணத்தின் ஊடே பகிர்ந்துகொள்கிறார்கள். இதுபோன்ற வித்தியாசமான நிகழ்ச்சியில் மூத்த நடிகைகள் லட்சுமி, மது, சாந்தி பாலச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதனை பிஜோய் நம்பியார், கிருஷ்ண மாரிமுத்து, சுவாதி ரகுராமன் ஆகியோர் இயக்கி இருக்கிறார்கள்.இதைத் தொடர்ந்து ‘தி வில்லேஜ்’ என்ற இந்தியாவில் முதன்முறையாக கிராபிக்ஸ் நாவலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் படைப்பு வெளியாகிறது. வித்தியாசமான இந்த முயற்சியை ‘அவள்’, ‘நெற்றிக்கண்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்குகிறார். இதில் நடிகர் ஆர்யா, நடிகை திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், முத்துக்குமார், கலைராணி, ஜார்ஜ் மரியான், ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம், பூஜா ராமச்சந்திரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த நான்கு தொடர்களும் அமேசான் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாக இருப்பதால் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என டிஜிட்டல் தள வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

எச். ஐ. வி. பரிசோதனைக்கு புதிய முறை அறிமுகம்

Next Post

இலங்கை வந்தார் தமிழக பா.ஜா.க. தலைவர் அண்ணாமலை !

Next Post
இலங்கை வந்தார் தமிழக பா.ஜா.க. தலைவர் அண்ணாமலை !

இலங்கை வந்தார் தமிழக பா.ஜா.க. தலைவர் அண்ணாமலை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026
பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

July 9, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

July 9, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures