Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதுவருடப்பிறப்பிலும் வீட்டுக்குச் செல்லாது மக்கள் போராட்டம்

April 14, 2022
in News, Sri Lanka News
0
புதுவருடப்பிறப்பிலும் வீட்டுக்குச் செல்லாது மக்கள் போராட்டம்

இன்று தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் சித்திரைப் புதுவருடப்பிறப்பை கொண்டாடும் வேளையிலும் இலங்கையில் மக்கள் போராட்டம் தொடர்கின்றது.

Image

கொழும்பு – காலி முகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பு தினமான இன்றும் 6 ஆவது நாளாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Image

ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் “கோட்டா கோ கம” என்ற பெயர்ப்பலகைப் போன்ற பதாதை காட்சிப்படுத்தப்பட்டு, அங்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டு போராட்டம் தொடர்கின்றது.

Image

போராட்ட களத்தில் புதுவருட நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன. போராட்டத்திற்கு நாளுக்கு நாள் மக்களின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது.

பல்லாயிரக்கணக்கான இளைஞர் , யுவதிகள் உள்ளிட்ட சகல தரப்பினரையும் இணைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் உணர்வு பூர்வமாகவும் , வலிமையானதாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அரசாங்கம் பேசுவதற்கு தயாராக இருக்கின்றது என்று கோரிக்கை விடுத்த போதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அந்த கோரிக்கைக்கு செவிமடுக்காது, ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும்., ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் பாராளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது போன்ற சில கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தை தொடர்கின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி தமிழ், சிங்களப்புத்தாண்டுக்கொண்டாட்டமான இன்றைய தினமும் (14)  நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களும், அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி நாடளாவிய ரீதியில் தம்புள்ளையில் மு.ப 9 மணிக்கும், குருணாகலில் மு.ப 11 மணிக்கும், அம்பேபுஸ்ஸவில் நண்பகல் 12 மணிக்கும் கடவத்தயில் பி.ப 1.30 மணிக்கும், பருத்தித்துறையில் பி.ப ஒரு மணிக்கும், கிளிநொச்சியில் பி.ப 3 மணிக்கும், வவுனியாவில் பி.ப 5 மணிக்கும், அநுராதபுரத்தில் பி.ப 7 மணிக்கும், காலிமுகத்திடலில் பி.ப 3 மணிக்கும் ‘கோட்டா கோ ஹோம்’ (வீட்டிற்குச் செல்லுங்கள் கோட்டா) என்ற கோஷத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, இன்றைய தினம் (14) காலிமுகத்திடலில் காலை 8.41 மணிக்கு அனைத்து பாரம்பரிய முறைப்படி பால் காய்ச்சப்படும் என்றும், அதற்கு வருகைதருபவர்களை மஞ்சள்நிற ஆடையணிந்துவருமாறும் சமூக செயற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

அத்தோடு இனங்களுக்கு இடையிலான ஒருமைப்பாட்டைக் காண்பிப்பதே இதன் நோக்கம் என்றும், மாறாக இதுவோர் கொண்டாட்டம் அல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ராஜபக்ஷாக்களின் ஆட்சியை முடிவிற்குக்கொண்டுவருவதை இலக்காகக்கொண்டு தமிழ், சிங்களப்புத்தாண்டு தினமான இன்று (14) காலை 8.41 மணிக்கு நாட்டுமக்கள் அனைவரும் தேங்காய் உடைத்துப் பிரார்த்திக்குமாறும் சமூகவலைத்தளங்களில் சிலர் பதிவுகளைச் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

 

Previous Post

சந்திரிக்காவுடன் பல அரசியல் தரப்புக்கள் சந்தித்து பேச்சு

Next Post

ஜனாதிபதியிடமோ பிரதமரிடமோ நாட்டின் நெருக்கடிகளுக்கு எவ்வித தீர்வும் இல்லை | ரஞ்சித்

Next Post
நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைப்பதாயின் அரசாங்கம் எதற்கு?

ஜனாதிபதியிடமோ பிரதமரிடமோ நாட்டின் நெருக்கடிகளுக்கு எவ்வித தீர்வும் இல்லை | ரஞ்சித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures