Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராணுவம் – பொலிஸாருக்கிடையில் முறுகல்? | பொலிஸாருக்கு வலுக்கும் ஆதரவு !

April 7, 2022
in News, Sri Lanka News
0
இராணுவம் – பொலிஸாருக்கிடையில் முறுகல்? | பொலிஸாருக்கு வலுக்கும் ஆதரவு !

இலங்கை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படைப் பிரிவின் 4 மோட்டார் சைக்கிள்கள், பாராளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள வீதித் தடையை அண்மித்து நிலை கொண்டிருந்த ஆர்ப்பாட்டக் காரர்களிடையே, தேவையற்ற விதத்தில்  சஞ்சரித்த சம்பவம் பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

இந் நிலையில்,   குறித்த சம்பவத்தின் போது, இராணுவ மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இராணுவத்தினரை பொலிஸார் மறித்து, எச்சரித்தமை, கைது செய்ய முயன்ற சம்பவங்கள் ஊடாக  இராணுவம் மற்றும் பொலிசாரிடையே பரஸ்பர மோதல்  ஏற்படும் அபாய நிலைமையை நோக்கி நகர்வுகளை எற்படுத்தலாம் என அஞ்சப்படுகின்றது.

இந் நிலையில் இராணுவ தளபதியும் முப்படைகளின் தலைமை அதிகாரியுமான  ஜெனரால் சவேந்ர சில்வாவின் கோரிக்கை பிரகாரம், பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, குறித்த சம்பவம் தொடர்பில்  விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளதுடன் தனது கவலையையும்  வெளிப்படுத்தியுள்ளார்.

இந் நிலையில், குறித்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் செயற்பட்ட விதம் மிகச் சரியானதே என தெரிவித்து பொலிஸாருக்கு ஆதரவாக பொலிஸ் திணைக்களத்துக்குள்ளும், பொது மக்களிடையேயும் ஆதரவு வலுத்து வரும் நிலையில்,  இராணுவத்தினரை மறித்த  பொலிசாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இராணுவ தரப்பு வலியுறுத்தி வருகின்றது. இந் நிலைமையே மோதல் நிலைமையை நோக்கி நகரலாம் என அச்சம் வெளியிடப்படுகின்றது.

 நடந்தது என்ன ? 

பாராளுமன்ற நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை ( 5) ஆரம்பிக்கப்பட்டிருந்த போது, பாராளுமன்றை சுற்றிவளைக்க ஆர்ப்பாட்டக்காரர்கள்  பாராளுமன்றம் நோக்கி பயணித்தனர். இதன்போது பாராளுமன்ற சுற்று வட்டம் அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் மறிக்கப்பட்டு அங்கு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதன்போது திடீரென இலக்கத்தகடற்ற 4  மோட்டார் சைக்கிள்களில் அவ்விடத்துக்கு வந்த இராணுவ மோட்டார் சைக்கிள் படைப் பிரிவின் வீரர்கள் ஆர்ப்பாட்டக் காரர்களிடையே  பயணித்தமையால் பெரும் பதற்றம் உருவானது. ஒரு மோட்டார் சைக்கிளைப் பிடித்துக்கொண்ட ஆர்ப்பாட்டக் காரர்கள்  இராணுவத்தினரை தாக்க முயன்றனர்.

இந் நிலையில் ஒருவாறு அவர்கள் தப்பித்து திரும்ப முற்பட்ட போது, கடமையில் இருந்த பொலிசார் அம்மோட்டார் சைக்கிள்களை மறித்து விசாரித்தனர்.

ஸ்தலத்தில் கடமைகளை முன்னெடுத்த உதவி பொலிஸ் அத்தியட்சர் வெத்தசிங்க மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சர்  மஹிந்த வில்லவ ஆரச்சி ஆகியோர் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தோரை மறித்து அவர்களை மோட்டார் சைக்கிளிலில் இருந்து இறக்கி கைது செய்யவும், அவர்களது நடவடிக்கை தொடர்பில் எச்சரிக்கவும் முயன்றனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் வந்த அவர்களின் அடையாளத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகளிலும் பொலிசார் ஈடுபட்டனர்.

அமைதி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துவரும் சிவில் சமூகத்தை  ஆயுதத்துடன் நுழைந்து, அவர்களை குழப்ப முயல வேண்டாம் எனவும்,  ஆர்ப்பாட்டக் காரர்கள் அமைதி ஆர்ப்பாட்டத்தையே முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் அவர்களை எச்சரித்தனர்.

அத்துடன் எந்த முன்னறிவுப்பும் இன்றி இவ்வாறு தேவையற்ற வேலைகளை செய்ய வேண்டாம் என பொலிசார் இராணுவத்தினரை எச்சரித்தனர்.

மோட்டார் சைக்கிளை நிறுத்தாது பயணிக்க முயன்ற இராணுவத்தினர் மீது  அதனை நிறுத்தச் செய்ய தேவையான பலப் பிரயோகத்தையும் ( கடுந்தொனியில் சற்று கடுமையாக நடந்துகொண்டமை ) பொலிஸார் பயன்படுத்தினர்.

இராணுவத்தினரின் முறைப்பாடு :

இவ்வாறான நிலையிலேயே இலங்கை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் குழுவின் 4 மோட்டார் சைக்கிள்கள், பாராளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள வீதித் தடையை அண்மித்த சந்தர்ப்பத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் செயற்பட்ட விதம் தொடர்பில் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை இராணுவம், பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்தது.

இராணுவத்தினரின்  கடமைகளுக்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன குறிப்பிட்டார்.

இராணுவத் தளபதியால் விடுக்கப்பட்ட இந்த கோரிக்கை தொடர்பில் உடனடியாக செயற்படுவதாக பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளதாக  பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு செயலாளரினால் பொலிஸ்மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் படி விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

பொலிஸ் உயரதிகாரியின் விளக்கம் :

எவ்வாறாயினும், குறித்த பாராளுமன்ற சுற்று வட்ட வளாக பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் வீரகேசரிக்கு தகவல் தருகையில்,

பொலிசார் அவ்விடத்தில் செயற்பட்ட விதம் மிகச் சரியானதே எனவும்,  சிவில் சமூக ஆர்ப்பாட்டக் காரர்களை குழப்பி வன்முறையை தூண்டும் விதமாக இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவினர் நடந்துகொண்டதாக சுட்டிக்காட்டினார்.

இந் நிலையிலேயே ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற தலையீடுகளை செய்த இராணுவத்தினர் தொடர்பில் பொலிஸார்  தேவையான தலையீடுகளைச் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

 பொலிஸுக்கு வலுக்கும் அதரவு :

இந் நிலையில் இந்த சம்பவம்  சமூக வளைத் தளங்களிலும், பிரதான ஊடகங்களிலும்  பரவி வரும் நிலையில்,  ஆர்ப்பாட்டத்தை குழப்ப முயன்ற இராணுவத்தினரைக் கண்டித்த பொலிஸாரை தண்டிக்க முயலக் கூடாது என பரவலாக எதிர்ப்புக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. 3

இதனால் பொலிசாருக்கு ஆதரவு வலுத்துள்ளது. பொலிஸ்  திணைக்களத்துக்குள்ளேயும், கடமைகளை சரியாக செய்தோரை  தைரியப்படுத்தும் விதமாக இராணுவத்தினை திருப்திப் படுத்த பொலிஸார் தண்டிக்கப்படல் கூடாது என்ற கருத்து மேலோங்கியுள்ளது.

 இடம்மாற்ற முஸ்தீபு :

எவ்வாறாயினும் பாதுகாப்பு அமைச்சு மற்றும்  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின்  அழுத்தங்கள் பிரகாரம்,  சிவில் ஆர்ப்பாட்டத்துக்கு பாதுகாப்பளித்த இரு உதவி பொலிஸ் அத்தியட்சர்களையும் பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றி   உத்தரவிட முஸ்தீபுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதற்கான கடிதம் தயார் செய்யப்பட்டிருந்த போதும்,  இச்செய்தி எழுதப்படும் போதும் ( புதக்கிழமை (6) மாலை 5.00 மணி) அக்கடிதத்தில் பொலிஸ் மா அதிபர் கையெழுத்திட்டிருக்கவில்லை  என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Previous Post

அமைச்சுகள், அமைச்சர்கள் இன்றிய நிலையில் தடையின்றி கடமைகளை நிறைவேற்ற ஆலோசனை

Next Post

திங்கள் நட்புவட்டத்தின் ஏற்பாட்டில் கிருபா பிள்ளையின் பிறந்த நாள் நிகழ்வு

Next Post
திங்கள் நட்புவட்டத்தின் ஏற்பாட்டில் கிருபா பிள்ளையின் பிறந்த நாள் நிகழ்வு

திங்கள் நட்புவட்டத்தின் ஏற்பாட்டில் கிருபா பிள்ளையின் பிறந்த நாள் நிகழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures