Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ். திருநெல்வேலி ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட 09 பெண்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

March 10, 2022
in News, Sri Lanka News
0
லண்டன் வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது.

யாழ். திருநெல்வேலி ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 09 பெண்களின் விளக்கமறியலை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் யாழ்.நீதவான் நீதிமன்று நீடித்துள்ளது.

திருநெல்வேலி பகுதியில் உள்ள விநாயகர் ஆலயம் ஒன்றில் கடந்த  1ஆம் திகதி காலை இடம்பெற்ற தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மத்தியில் ஊடுருவிய திருட்டு கும்பல் ஒன்று நான்கு பெண் பக்தர்களின் சங்கிலிகளை அறுத்து களவாடியுள்ளது.

சங்கிலிகளை பறிகொடுத்த பெண் பக்தர்கள் அது தொடர்பில் ஆலய இளைஞர்களிடம் தெரிவித்ததை அடுத்து துரிதமாக செயற்பட்ட இளைஞர்கள் ஆலயத்திற்கு வந்திருந்த சந்தேகத்திற்கு இடமானவர்களை நோட்டமிட்டுள்ளனர்.

அதன் போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆலய வளாகத்தில் நடமாடிய சில பெண்களை விசாரித்த வேளை அவர்கள் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதனை அறிந்து கொண்டுள்ளனர்.

அதனை அடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் , 09 பெண்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களை ஆலயத்தில் மறித்து வைத்தவாறே சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் , 09 பெண்களையும் தமது பாதுகாப்பில் எடுத்து அவர்களை கைது செய்து விசாரணை செய்தனர்.

அதன் போது அவர்கள் தங்கள் கொழும்பு உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் என கூறியுள்ளனர். அவர்களை பரிசோதனை செய்த வேளை அவர்களில் ஒருவரின் உடைமையில் இருந்து சங்கிலி ஒன்று மீட்கப்பட்டது.

அதேவேளை குறித்த கும்பலை ஆலயத்திற்கு அழைத்து வந்து இறக்கி விட்ட முச்சக்கர வண்டி இரண்டினை அடையாளம் கண்டுள்ளனர். அதன் அடிப்படையில் முச்சக்கர வண்டி சாரதிகளை  பொலிஸார் தேடி வருகின்றனர்.

அத்துடன் குறித்த பெண்களுடன் சில ஆண்களும் ஆலயத்திற்கு வந்து இருக்கலாம் எனவும் , சந்தேகம் தெரிவித்தனர்.

09 பெண்களிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , அவர்களை கடந்த 2ஆம் திகதி யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவர்களை இன்றைய தினம் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , 09 பெண்களின் விளக்கமறியலையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் நீடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை குறித்த பெண்களை ஆலயத்திற்கு அழைத்து வந்து இறக்கி விட்ட முச்சக்கர வண்டிகள் இரண்டு தொடர்பிலும் இதுவரையில் தகவல்கள் தெரியாத நிலையில் கோப்பாய் பொலிஸார் தொடர்ந்து அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இலங்கை வீரருக்கு சிறந்த கள மெய்வல்லுநர் விருது

Next Post

மாணவியை கொடூரமாகக் கொன்ற கொலையாளிக்கு கடும் தண்டனை வழங்குமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Next Post
மாணவியை கொடூரமாகக் கொன்ற கொலையாளிக்கு கடும் தண்டனை வழங்குமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மாணவியை கொடூரமாகக் கொன்ற கொலையாளிக்கு கடும் தண்டனை வழங்குமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர்

July 5, 2026
திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!

திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!

July 5, 2026
நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures