Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ராஜீவ் காந்தி கொலை வழக்கு | பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது இந்திய உச்ச நீதிமன்றம்

March 9, 2022
in News, இந்தியா
0
பேரறிவாளனுக்கு பரோலில் செல்ல அனுமதி!

இந்திய முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, பரோலில் இருந்தாலும் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பிணை வழங்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் தற்போது சிறை விடுப்பில் இருந்து வருகிறார். அவருக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளனுக்கு பிணை வழங்க இந்திய மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், மத்திய அரசு தரப்பில் வழக்குரைஞருக்கும் இடையே காரசார வாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

பேரறிவாளனுக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பேரறிவாளன் விவகாரம் தங்கள் அதிகாரத்தின் கீழ் வரும் போது தமிழக அரசு முடிவெடுக்க முடியாது. சம்பந்தப்பட்ட அரசுதான் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என்று மத்திய அரசு கூறியது.

அப்படி என்றால் அதுமாநில அரசுதான் என மத்திய அரசின் வாதம் குறித்து  உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

சிறை விதிகளுக்குள்பட்டு பரோல் வழங்கலாமே தவிர ஜாமீன் வழங்கக் கூடாது என்று மத்திய அரசு தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் மீதான தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்க முடியாது.  குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியே முடிவெடுக்க முடியும் என்றும் பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

அதிகாரம் பற்றி பிறகு விசாரிக்கிறோம். இப்போது பிணை பற்றி விசாரிக்கலாம். 3 முறை பரோல் வழங்கப்பட்ட போதும் விதிகளுக்கு உள்பட்டுத்தான் வழங்கப்பட்டுள்ளது என்று பேரறிவாளன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

பேரறிவாளன் ஏற்கனவே 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.  மேலும் தாமதம் செய்வது எப்படி? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதற்கு, ஏற்கனவே தண்டனை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு சலுகையை எப்படி ஏற்பது என்று மத்திய அரசு கேட்க, தண்டனை குறைப்பு என்பதை உச்ச நீதிமன்றம்தான் வழங்கியது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு, ஆயுள்தண்டனை என்றால் ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டும் என்பதுதான் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி, உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது. 1991ஆம் ஆண்டு பேரறிவாளன் கைது செய்யப்பட்ட பிறகு, 30 ஆண்டுகளுக்குப் பின் தற்போதுதான் பிணை வழங்கப்பட்டுள்ளது.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

யாழில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று குடும்பம் நடாத்திய 18 இளைஞன் கைது!

Next Post

நடிகை ஸ்ரேயா சரணின் ‘கப்ஜா’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post
நடிகை ஸ்ரேயா சரணின் ‘கப்ஜா’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகை ஸ்ரேயா சரணின் 'கப்ஜா' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

தங்க நகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு!

June 13, 2026
விஷால் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ படத்தின் டீஸர் வெளியீடு

விஷால் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ படத்தின் டீஸர் வெளியீடு

June 13, 2026
ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் அமெரிக்க இளைஞன் தாப் உலக சாதனை

ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் அமெரிக்க இளைஞன் தாப் உலக சாதனை

June 12, 2026
ஈச்சிலம்பற்று படுகொலை ; 41வது நினைவேந்தல் நாள்

ஈச்சிலம்பற்று படுகொலை ; 41வது நினைவேந்தல் நாள்

June 12, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures