Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிட்டி லீக் – எக்ஸ்போ லங்கா யூத் கால்பந்தாட்ட கால் இறுதிப் போட்டிகள்

February 27, 2022
in News, Sports
0
சிட்டி லீக் – எக்ஸ்போ லங்கா யூத் கால்பந்தாட்ட கால் இறுதிப் போட்டிகள்

சிட்டி புட்போல் லீக் ஏற்பாடு செய்துள்ள 19 வயதுக்குட்பட்ட சிட்டி லீக் – எக்ஸ்போ லங்கா யூத் கிண்ண கால்பந்தாட்டத்தில் கடைசி இரண்டு கால் இறுதிப் போட்டிகள் சிட்டி லீக் மைதானத்தில் இன்றும் நாளையும்  நடைபெறவுள்ளன.

இன்று  சனிக்கிழமை 26 ஆம் திகதி பிற்பகல் நடைபெறவுள்ள கால் இறுதிப் போட்டியில் கலம்போ எவ்சி இளையோர் அணியை மாளிகாவத்தை யூத் அணி எதிர்த்தாடவுள்ளது.

18 இளையோர் அணிகள் பங்குபற்றிய இந்த சுற்றுப் போட்டியில் மிகவும் பலம்வாய்ந்த அணியாக திகழும் கலம்போ எவ்சி இளையோர் அணி தோல்வி அடையாத அணியாக பி குழுவிலிருந்து கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது.

பேர்கசன் (4 – 0), வைக்கிங்ஸ் (7 – 0), ஜாவா லேன் (2 – 0), ஸ்லேவ் ஐலண்ட இலவன் (3 – 0) ஆகிய இளையோர் அணிகளை கலம்போ எவ்சி இளையோர் அணி மிக இலகுவாக வெற்றிகொண்டது.

இந்த 4 போட்டிகளில் மொத்தமாக 16 கோல்களைப் போட்ட கலம்வோ எவ்சி இளையோர் அணி எதிரணிகளுக்கு ஒரு கோலைத்தானும் விட்டுக்கொடுக்கவில்லை.

இவ்வணியை எதிர்த்தாடும் மாளிகாவத்தை யூத் அணியும் தோல்வி அடையாத அணியாக ஏ குழுவிலிருந்து கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது. எனினும் அதன் போட்டி முடிவுகள் சிறப்பாக அமையவில்லை.

சோண்டர்ஸ் (2 – 0), விக்டரி (2 – 1) ஆகிய இளையோர் அணிகளை வெற்றிகொண்ட மாளிகாவத்தை யூத் குறே (0 – 0), யங் சில்வர் (1 – 1) ஆகிய இளையோர் அணிகளுடனான போட்டிகளை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

கலம்போ எவ்சி இளையோர் அணியிலும் மாளிகாவத்தை யூத் அணியிலும் மிகச் சிறந்த வீரர்கள் இடம்பெறுவதால் நாளைய கால் இறுதிப் போட்டி விறுவிறுப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மூடப்பட்ட அரங்கில் ஜாவா லேன் – சோண்டர்ஸ்

ஜாவா லேன் இளையோர் அணியும் சோண்டர்ஸ் இளையோர் அணியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கடைசி கால் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

இந்தப் போட்டியை மூடிய அரங்குக்குள் நடத்துவதற்கு சிட்டி லீக் நிருவாகத்தினர் தீர்மானித்துள்ளனர்.

இதற்கு முன்னர் இந்த இரண்டு அணிகள் சம்பந்தப்பட்ட போட்டியின்போது இடம்பெற்ற அசம்பாவிதம் மீண்டும் இடம்பெறாமிலிருப்பதை உறுதி செய்யும்வகையில் சிட்டி லீக் நிருவாகத்தினரும் போட்டி ஏற்பாட்டுக் குழுவினரும் இப் போட்டியை மூடிய அரங்கில் நடத்த தீர்மானித்துள்ளனர்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

வலிமை படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு

Next Post

இலங்கையில் நாளாந்தம் 4 மடங்காக அதிகரிக்கும் தங்கத்தின் விலை

Next Post
கொள்ளையிட்ட நகையை திருப்பி கொடுத்த திருடன்

இலங்கையில் நாளாந்தம் 4 மடங்காக அதிகரிக்கும் தங்கத்தின் விலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!

திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!

July 5, 2026
நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures