Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமரை சந்திக்க அவசியம் இல்லை | ஜனாதிபதியிடம் மகஜர் கையளிக்க முயற்சித்தோம் | சுமந்திரன்

February 25, 2022
in News, Sri Lanka News
0
புதிய அரசியலமைப்பு தொடர்பில் TNA மகாநாயக்கருடன் கலந்துரையாட தீர்மானம்.

அலரிமாளிகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாட பிரதமர் இணக்கம் தெரிவித்து காலம் ஒதுக்கிய போதும் அதனை நிராகரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர், பிரதமரை தாம் ஆர்ப்பாட்டம் செய்யும் வீதிக்கு வந்து கதைக்குமாறு தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பினர் நியாயமாக நடந்துகொள்ள முயற்சியுங்கள்.  என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர சபையில் தெரிவித்தார். பிரதமரை சந்திக்கவோ அல்லது அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவோ நாம் முயற்சிக்கவில்லை. ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றினை கையளிக்க முயற்சித்தோம் என சுமந்திரன் எம்.பி குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தாவர, விலங்கினப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று (நேற்று) பாராளுமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அதேபோல் காலையில் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற வேளையில் குறைந்தபட்சம் அதிகாரி ஒருவர் கூட வரவில்லை எனவும் கூறினர். இது குறித்து ஜனாதிபதி செயலகத்தில் விசாரித்தேன். செயலகத்தின் சிரேஷ்ட பிரத்தியேக செயலாளர் மற்றும் செயலக அதிகாரிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது கூட்டமைப்பினரும் ஜனாதிபதியை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் இன்று ஜனாதிபதி இல்லாத காரணத்தினால் பிரதமரை தொடர்புபடுத்தி தருகின்றோம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல் பிரதமருடன் உரையாடி சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். அலரிமாளிகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாட பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதனை நிராகரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர், பிரதமரை தாம் ஆர்ப்பாட்டம் செய்யும் இடத்திற்கு அதாவது வீதிக்கு வந்து கதைக்குமாறு தெரிவித்துள்ளனர். முதலில் நீங்கள் நியாயமாக நடந்துகொள்ள முயற்சியுங்கள். நாட்டின் பிரதமர் வீதிக்கு வந்து கலந்துரையாட மாட்டார். அவர் அழைப்பு விடுத்தால் அதற்கு செவி மடுத்து நீங்கள் சென்று கலந்துரையாட வேண்டும். உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தும் அதனை நீங்கள் பயன்படுத்தவில்லை. ஆகவே சர்வதேசத்தை ஈர்க்கவும் இங்கு குழப்பத்தை ஏற்படுத்தவும் கூட்டமைப்பினர் முயற்சிக்கின்றனர் என்றார்.

இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன் கேசரிக்கு தெரிவிக்கையில்,

பிரதமரை சந்திக்கவோ அல்லது அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவோ நேற்று நாம் முயற்சிக்கவில்லை. ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றினை கையளிக்க முயற்சித்தோம். அப்போது செயலகத்தில் இருந்து வெளியில் வந்த ஒருவர் தன்னை செயலாளர் என அறிமுகப்படுத்தியதுடன், ஜனாதிபதியை சந்திக்க முடியாது வேண்டுமானால் அலரிமாளிகைக்கு சென்று பிரதமரை சந்திக்க முடியும் என்றார். பிரதமரை சந்திக்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் சந்தித்திருப்போம், எமக்கு அவரை சந்திக்க வேண்டிய தேவை இல்லை. ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை என்பதை நாம் தெரிவித்தோம் என்றார்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இந்தியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து | 16 பேர் மாயம்

Next Post

முதல் நாள் போரில் 800 ரஷிய வீரர்களை வீழ்த்தியுள்ளோம் | உக்ரைன் பாதுகாப்புதுறை அறிவிப்பு

Next Post
முதல் நாள் போரில் 800 ரஷிய வீரர்களை வீழ்த்தியுள்ளோம் | உக்ரைன் பாதுகாப்புதுறை அறிவிப்பு

முதல் நாள் போரில் 800 ரஷிய வீரர்களை வீழ்த்தியுள்ளோம் | உக்ரைன் பாதுகாப்புதுறை அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

May 31, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures