Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சந்தையில் எரிவாயு சிலிண்டர்களுக்கு பெரும் தட்டுப்பாடு – நுகர்வோர் விசனம்

December 17, 2021
in News, Sri Lanka News
0
எரிவாயு விலை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படமாட்டாது – அரசாங்கம்

எரிவாயு கசிவு காரணமான வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து எந் நிறுவனத்தின் சிலிண்டர் பாதுகாப்பானது என்ற குழப்ப நிலைக்கு நுகர்வோர் தள்ளப்பட்டுள்ளார்கள்.

எரிவாயு கசிவுடனான வெடிப்பு சர்ச்சைக்கு மத்தியில் சந்தையில் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு நிலவுவதையும் அவதானிக்க முடிகிறது.

சமையல் எரிவாயு கசிவு காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் வெடிப்பு சம்பவங்கள் காரணத்தினால் நுகர்வோர் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதை தவிர்த்துள்ளார்கள்.

இரு பிரதான நிறுவனங்களின் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் நிலை காணப்படுவதால் சந்தையில் தற்போது எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

லிட்ரோ நிறுவனம் இரண்டாவது முறையாக நாட்டுக்கு கொண்டு வந்த எரிவாயு தொகையிலும் குளறுபடிகள் காணப்படுவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

நாளை லாப் ரக நிறுவனம் சந்தைக்கு எரிவாயு சிலிண்டர்களை முறையாக விநியோகிக்கும் என லாப் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தின் தலைவர் கே.எச்.வேகபிடிய தெரிவித்தார்.

நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு மாதகாலமாக சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், மரணங்களும் பதிவாகியுள்ளன.சமையல் எரிவாயு கலவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதன் காரமணாக சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறுவதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துஷான் குணவர்தன பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.அதற்கமைய இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் அனுமதிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்குமாறு மேன்முறையீட்டு நிறுவனம்  லிட்ரோ மற்றும் லாப் ரக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

தேசிய மட்டத்தில் விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களில் சமையல் எரிவாயு கசிவு உணர்திறனை தூண்டும் மேர்கெப்டன் இரசாயன பதார்த்தம் 14 சதவீத அலகிற்கும் குறைவான மட்டத்தில் சேர்க்கப்படுகிறது.ஆகவே சந்தைக்கு  எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடை நிறுத்துமாறு நுகர்வோர் அதிகார சபை கடந்த 3ஆம் திகதி இரண்டு பிரதான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியது.

எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த குழுவினரது அறிக்கையின் பரிந்துரைக்கமைய எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க இரண்டு பிரதான நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.சிவப்பு நிற முத்திரை பதிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர் பாதுகாப்பானது என குறிப்பிட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களில் இருந்து எரிவாயு கசிவு இடம்பெற்று அதனையண்மித்த வெடிப்பு சம்பவங்கள் நாட்டில் ஒரு சில பகுதிகளில் பதிவாகியுள்ளன.

லிட்ரோ நிறுவனம் கடந்த 11ஆம் திகதி நாட்டுக்கு கொண்டு வந்த 3700 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயுவில் எதில் மெர்கெப்டன் இரசாயன பதார்த்தம் குறைந்தளவில் சேர்க்கப்பட்டுள்ள காரணத்தினால் அதனை தரையிறக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கவில்லை.

லிட்ரோ நிறுவனம் இவ்வாரம் நாட்டுக்கு கொண்டு வந்த  எரிவாயு தொகையிலும் குளறுபடிகள் காணப்படுவதாக நுகர்வோர்  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நுகர்வோர் தற்போது பாதுகாப்பான சமையல் எரிவாயு எது என்ற குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதை நுகர்வோர் ஆரம்பத்தில் புறக்கணித்தனர்.சந்தைக்கும் தற்போது எரிவாயு சிலிண்டர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு வெடிப்புடனான சர்;ச்சைக்கு மத்தியில் சந்தையில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதை அவதானிக்க முடிகிறது.அத்துடன் ஒரு சில பகுதிகளில் உள்ள  சமையல் எரிவாயு விநியோக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | easy24newskiruba@gm

Previous Post

2021 உலக அழகி இறுதிப்போட்டி கொவிட் பரவலால் ஒத்திவைப்பு

Next Post

புதிதாக இனங்காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் தொற்றாளர்களில் ஒருவர் வெளிநாட்டவர்

Next Post
ஒமைக்ரானை 2 மணி நேரத்தில் கண்டு பிடிக்கும் பரிசோதனை கருவி

புதிதாக இனங்காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் தொற்றாளர்களில் ஒருவர் வெளிநாட்டவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures