பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் அவரது மனைவி கேரி ஜோன்சனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
திருமதி கேரி ஜோன்சன் வியாழக்கிழமை காலை லண்டன் வைத்தியசாலையில் பெண் குழந்தையொன்றை பெற்றெடுத்தார் என்று அந்த அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
தாய் மற்றும் குழந்தை இருவரும் மிகவும் நன்றாக உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் மனைவி கடந்த ஜூலை மாதம் தான் கர்ப்பமாக உள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]