Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரபாகரனின் கடிதத்தை இப்போது வெளியிட்டது ஏன்?- விளக்குகிறார் வைகோ

September 18, 2016
in News, Politics
0
பிரபாகரனின் கடிதத்தை இப்போது வெளியிட்டது ஏன்?- விளக்குகிறார் வைகோ

பிரபாகரனின் கடிதத்தை இப்போது வெளியிட்டது ஏன்?- விளக்குகிறார் வைகோ

விடுதலைப் புலிகள்’ இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தை, 28 ஆண்டுகளுக்குப்பிறகு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார்.

செப்டம்பர் 15-ம் தேதி, திருச்சியில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவில், வைகோ அந்தக் கடிதத்தை வெளியிட்டது ஏன்? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் தொடங்கி வெகுஜன மக்கள் வரை புரியாத புதிராக நீடிக்கிறது.

கர்நாடகாவும் தமிழகமும் காவிரியை மையப்படுத்தி, பற்றி எரிந்து கொண்டிருந்த நேரத்தில், வைகோவின் நடவடிக்கையை சில அரசியல் கணக்குகளுக்குள் திணித்தும் பார்க்கின்றனர் பலர்.

இப்படி பல சர்ச்சைகளை எழுப்பியுள்ள கடித விவகாரம் குறித்து வைகோவிடம் கேட்ட போது அவர் அளித்த விளக்கம்..

உலகத்தில் யாருக்கும் இப்படிப்பட்ட சான்றிதழை தலைவர் பிரபாகரன் கொடுத்ததில்லை.

தலைவர் பிரபாகரன் அந்தக் கடிதத்தில், ‘வைகோ உயிருக்குத் துணிந்து, மரணத்திற்கு அஞ்சாமல், இங்கு வந்ததை நினைக்கும்போது, நான் எனது மொழிக்காகவும், ஈழத் தமிழ் நாட்டிற்காகவும் ஆயிரம் முறை இறக்கலாம் என்ற தெம்பு ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாசகங்களைச் சொல்லும் தைரியம் உலகத்தில் யாருக்கும் கிடையாது, உலகத்தில் அவருக்கு நிகரான தலைவர் (பிரபாகரன்) யாரும் கிடையாது.

அவர் என்னைக் குறிப்பிட்டு, இப்படிச் சொன்னது, எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய பாக்கியம்; மிகப்பெரிய விருது அது.

அதுபோல, அவர் கழுத்தில் கட்டியிருந்த சயனைடு குப்பியை, என்னைத் தவிர வேறு யாருக்கும் கழுத்தில் கட்டிவிட்டது கிடையாது. அதுவும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.

தலைவர் பிரபாகரன், என்னை அதிகமாகப் புகழ்ந்து எழுதிய கடிதத்தை கலைஞர் ரசிக்கவில்லை. இதை நான் குறையாகச் சொல்லவில்லை.

அந்தக் கடிதத்தில், அவரைப் பற்றி தலைவர் பிரபாகரன் அதிகமாக எழுதியிருப்பார் என்று கலைஞர் நினைத்திருப்பார். ஆனால், அந்தக் கடிதம், என்னைப் பற்றி அதிகமாக புகழ்ந்து எழுதப்பட்டு இருந்தது.

அதனால், கலைஞர் அதை ரசிக்கவில்லை. அந்தக் கடிதத்தை வாசிக்கும்போது, கலைஞர் வெளிப்படுத்திய முகபாவனைகளில் இருந்து அதை நான் புரிந்து கொண்டேன்.

கடிதத்தைப் படித்து முடித்த கலைஞர், ’பற்று இருக்கலாம்; வெறி இருக்கக்கூடாது’ என்று எனக்கு அறிவுரை கூறினார்.

சில மாதங்கள் கழித்து, ’அந்தக் கடிதம் எதற்கு? எதிர்காலத்தில் தேவையற்ற பிரச்னைகள் வரும். அதனால், அதை கிழித்துவிட்டேன்’ என்று கலைஞர் என்னிடம் கூறினார்.

இந்தச் சம்பவங்கள் நடந்தபோது, கடல் புலிகள் தலைவர் சூசை, சிகிச்சைக்காக இங்கு வந்து தங்கியிருந்தார்.

நான் ஈழம் சென்று திரும்பியதை அறிந்த சூசை, இரவு 10 மணிக்கு என்னைப் பார்க்க வந்தார்.

அண்ணா, நீங்கள் பத்திரமாக திரும்பி வீட்டீர்களா? என்று தலைவர் கவலையோடு விசாரித்துக் கொண்டிருக்கிறார் என்று கேட்டவரிடம், ’தலைவர் பிரபாகரன் அவர்கள், கலைஞருக்கு ஒரு கடிதம் கொடுத்துள்ளார். நான் அதை காலையில் போய் அவரிடம் கொடுக்கப்போகிறேன்’ என்றேன்.

அப்போதுகூட எனக்கு அதை பிரதி எடுக்கும் எண்ணம் தோன்றவில்லை. ஆனால், சூசைதான், ’அண்ணா, இதை ஒரு பிரதி எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்.

அதோடு, அவரே கிளம்பிப்போய், எங்கேயோ பிரதி எடுத்துவந்து, இரவு 11.30 மணிக்கு என்னிடம் கொடுத்தார்.

இது யாருக்கும் தெரியாது. நான் இதை யாரிடமும் சொல்லவில்லை. இதை நீண்ட காலமாக பூட்டியே வைத்திருந்தேன்.

தலைவர் பிரபாகரன் என் மீது எவ்வளவு நம்பிக்கையும், மதிப்பும் வைத்திருந்தார் என்பதற்கு அவருடைய இந்தக் கடிதமே சாட்சி.

இதை எப்போதாவது ஒரு கட்டத்தில் வெளியிட்டுத்தானே தீர வேண்டும். கடந்த நான்கைந்து வருடங்களாக இதைப்பற்றி யோசித்துக் கொண்டே இருந்தேன்.

தமிழ் ஈழம்’ என்ற உணர்வு மீண்டும் இப்போது கிளர்ந்து எழ வேண்டிய ஒரு காலம். மீண்டும் ஒரு பெரும் அழிவு நடப்பதற்குள் அந்தக் கிளர்ச்சி எழ வேண்டும்.

ஏனென்றால், மொத்தமாகவே, பெரும் அழிவும் இன அழிப்பும் நடந்து கொண்டிருக்கிற நேரம் இது. இந்தக் கட்டத்தில் இந்தக் கடிதம், ஈழ உணர்வாளர்கள் மனதில் ஒரு எழுச்சியை உருவாக்கும் என்று என் மனதில் பட்டது.

இதை இனியும் தாமதப்படுத்த வேண்டாம். ஏற்கனவே, 28 வருடங்கள் ஓடிவிட்டது. வாழ்க்கையில் சில நல்லவற்றை வெளி உலகுக்கு காட்டாமல் போவது நல்லதல்ல.

எனவே, இனியும் தாமதிக்கக்கூடாது என்று யோசித்துத்தான் தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதத்தை வெளியிட்டேன். என்றார்..

அழிக்கப்பட்ட ஆவணம் இதோ

Tags: Featured
Previous Post

இலங்கையில் போர்க்குற்றம் புரிந்த பான் கீ மூனின் மருமகன்!

Next Post

போர் முரசறையும் இலங்கை இராணுவம்! – மைத்திரி ரணில் மௌனம்?

Next Post

போர் முரசறையும் இலங்கை இராணுவம்! - மைத்திரி ரணில் மௌனம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures