நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டிற்கான திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் விருதுகள் பெற்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்துக்கு திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதற்காக பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.
அந்தவகையில் கவிஞர் வைரமுத்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அந்த பதிவில், “தாதா சாகேப் பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த்; ஊர்கூடி வாழ்த்துவோம்”
”கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா என்று பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் ஒன்றிய அரசின் கண்களுக்குக் காட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]