Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயம் என்றால் ஏன் கோட்டா பதவிக்கு வந்தார்? | மனோகணேசன்

October 14, 2021
in News, Sri Lanka News
0
பயம் என்றால் ஏன் கோட்டா பதவிக்கு வந்தார்? | மனோகணேசன்

சீரான தலைமைத்துவம் இல்லாத நாடாக இலங்கை மாறியிருக்கின்றது. அரசியலில் தன்னை விடவும் தனது தமையனுக்கே அதிக அனுபவம் இருக்கின்றது என்று ஜனாதிபதி கூறுகின்றார். அவ்வாறெனில் அவர் எதற்காக ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்டார்? தேர்தல் பிரசாரத்தின்போது, ‘அனைத்தையும் என்னால் மாத்திரமே செய்யமுடியும்’ என்று ஏன் கூறினார்? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமாத்திரமன்றி கடந்த இருவருடங்களில் தாம் தவறிழைத்திருப்பதை ஏற்றுக்கொண்டு அதனை எதிர்வருங்காலங்களில் திருத்திக்கொள்வதாகப் பேசிய ஜனாதிபதியினால் கடந்த வாரம் இராணுவத்தின் 72 ஆவது வருடப்பூர்த்தியை முன்னிட்டு அநுராதபுரத்தில் திறந்துவைக்கப்பட்ட அரங்கின் முன்றலிலுள்ள பெயர்ப்பலகையில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது.

தவறுகளைத் திருத்திக்கொள்வது என்பதன் அர்த்தம் இதுவா? என்றும் கேள்வி எழுப்பியுள்ள மனோகணேசன், நாட்டை நிர்வகிக்கமுடியாவிட்டால் தகுதிவாய்ந்தவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு விலகிக்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

எமது நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக தற்போதைய அரசாங்கத்தினால் அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் நூற்றுக்கு நூறு சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. தேநீர், பாண், பணிஸ், கொத்து, ஃபிரைட் ரைஸ் உள்ளிட்ட அனைத்து உணவுப்பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஆனால் கொவிட் – 19 வைரஸ் பரவலைக் காரணமாகக்கூறி இதனை மூடிமறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதனை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு நாம் வலியுறுத்துகின்றோம்.

கொவிட் – 19 வைரஸ் பரவல் என்பது இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மாறாக இந்தியா, பங்களாதேஷ் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் அனைத்தும் இத்தொற்றுப்பரவல் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றன. இருப்பினும் அந்த நாடுகள் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தியிருப்பதுடன் மக்களின் வருமானமும் வாழ்க்கைத்தரமும் வீழ்ச்சியடைவதைத் தடுத்துநிறுத்தியிருக்கின்றன.

இருப்பினும் எமது நாட்டில் மக்களின் வருமானம் வீழ்ச்சியடைந்திருக்கும் அதேவேளை, வாழ்க்கைத்தரம் முழுமையாக சீர்குலைந்துபோயுள்ளது. கெப்டன் இல்லாத கப்பலைப்போன்று அரசாங்கம் இல்லாத நாடாக இலங்கை மாறியிருக்கின்றது.

நாட்டுமக்கள் அனைவரும் தலைவன் என்று ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, தன்னை விடவும் தனது தமையனுக்கே அதிக அனுபவம் இருப்பதாகக் கூறுகின்றார். அவ்வாறெனில் அவர் எதற்காக ஜனாதிபதித்தேர்தலில் களமிறங்கினார்? தேர்தல் பிரசாரங்களின்போது, ‘நான் மட்டுமே அனைத்தையும் செய்தேன். என்னால் மாத்திரமே அனைத்தையும் செய்யமுடியும்’ என்று பேசினார். ஆனால் இப்போது அவரால் எதனையும் செய்யமுடியாமல்போயுள்ளது.

எனவே ஏற்கனவே எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியதைப்போன்று, அவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியவில்லை என்றால் நிர்வகிக்கும் திறமையுள்ளவர்களிடம் நாட்டைக் கையளித்து விலகிச்செல்லுமாறு வலியுறுத்துகின்றோம்.

அடுத்ததாக இலங்கை ஓர் தீவென்பதால், கொவிட் – 19 வைரஸ் பரவலை இலகுவாகக் கட்டுப்படுத்தக்கூடிய வாய்ப்பு எமது நாட்டிற்குக் காணப்பட்டது. ஆரம்பத்திலேயே விமானநிலையங்களை மூடுமாறு நாம் வலியுறுத்தினோம்.

இருப்பினும் அரசாங்கத்தின் முறையற்ற கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளின் விளைவாகத் தற்போது பெருமளவானோர் கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றார்கள். அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மேலும் இரசாயன உர இறக்குமதியை இடைநிறுத்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தினால் விவசாயிகள் மற்றும் பயிர்ச்செய்கையாளர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள். இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமது நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்தில் தீங்கேற்படுத்தும் பாக்றீரியா காணப்பட்டதாக இலங்கை தேசிய தாவரவியல் பரிசோதனை மையத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பு தவறானது என்று இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் தெரிவித்திருக்கின்றது.

இந்தியா, சீனா அல்லது அமெரிக்காவினால் கூறப்படுகின்றவற்றுக்கு அமைவாகச் செயற்படவேண்டிய அவசியம் எமது நாட்டிற்கு இல்லை. ஆகவே சீனத்தூதுரகத்தின் கூற்று தொடர்பில் தேசிய தாவரவியல் பரிசோதனை மையம் உரிய பதிலை வழங்கவேண்டும்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் கடந்த இருவருடங்களில் தாம் தவறிழைத்திருப்பதை ஏற்றுக்கொண்டு அதனை எதிர்வருங்காலங்களில் திருத்திக்கொள்வதாகப் பேசிய ஜனாதிபதியினால் கடந்த வாரம் இராணுவத்தின் 72 ஆவது வருடப்பூர்த்தியை முன்னிட்டு அநுராதபுரத்தில் திறந்துவைக்கப்பட்ட அரங்கின் முன்றலிலுள்ள பெயர்ப்பலகையில் சிங்கள மற்றும் ஆங்கிலமொழிகள் மாத்திரமே இடம்பிடித்திருக்கின்றன. அங்கு தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது. தவறுகளைத் திருத்திக்கொள்வது என்பதன் அர்த்தம் இதுவா? என்று ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்ப விரும்புகின்றோம் என்று குறிப்பிட்டார்.

அதேவேளை அதிபர், ஆசிரியர்களின் வேலைநிறுத்தப்போராட்டத்தினால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மனோகணேசன், ‘வேலைநிறுத்தப்போராட்டத்தினால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் நாம் பெரிதும் கரிசனை கொண்டிருக்கின்றோம்.

எனவே இதுகுறித்து அவதானம் செலுத்துமாறு ஆசிரியர்களிடம் கோரும் அதேவேளை, மறுபுறம் இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வைப்பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கத்திடமும் வலியுறுத்துகின்றோம் என்று தெரிவித்தார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

மாகாணங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து தயார் நிலையில்

Next Post

இங்றிப் நிறுவனத்தின் புதிய சிறகுவிரிப்பாக திங் சைன் (Think Sign)!

Next Post
இங்றிப் நிறுவனத்தின் புதிய சிறகுவிரிப்பாக திங் சைன் (Think Sign)!

இங்றிப் நிறுவனத்தின் புதிய சிறகுவிரிப்பாக திங் சைன் (Think Sign)!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures