யாழ்.கீரிமலை கடலில் குளித்துக்கொண்டு இருந்த போது, கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தட்டாதெருவை சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சிவன் (வயது 18) எனும் இளைஞனே காணாமல்போன நிலையில் நீண்ட தேடுதலுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் உறவினரின் அந்தியேட்டி கிரியைக்காக கீரிமலைக்கு சென்று இருந்ததாகவும் , கிரியைகளை முடித்துக்கொண்டு, கீரிமலை கடலில் நீராடிக்கொண்டு இருந்த வேளை கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கும் , கடற்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து , காணாமல்போன இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்து நிலையில் குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]