Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஆரம்பமானது ‘பிக்பாஸ் 5’ | போட்டியாளர்கள் யார் யார்? | முழு விவரம்

October 4, 2021
in Cinema, News
0
ஆரம்பமானது ‘பிக்பாஸ் 5’ | போட்டியாளர்கள் யார் யார்? | முழு விவரம்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கி உள்ளது.

 

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மிகவும் பிரபலம். இதுவரை ஒளிபரப்பான 4 சீசன்களும் ரசிகர்களை கவர்ந்தது என்றே சொல்லலாம். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை பெற்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் இன்று தொடங்கி உள்ளது. வழக்கம் போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் விவரம் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் 5 போட்டியாளர்கள்

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்) 2. இசைவாணி (கானா பாடகி)3. அபிஷேக் (விமர்சகர்)4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)

பிக்பாஸ் 5 போட்டியாளர்கள்

5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி) 6. அபினய் வட்டி (நடிகர்) 7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)

பிக்பாஸ் 5 போட்டியாளர்கள்

9. நதியா (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)11. வருண் (நடிகர்)12. ஐக்கி பெரி (ராப் பாடகி)

பிக்பாஸ் 5 போட்டியாளர்கள்

13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)

பிக்பாஸ் 5 போட்டியாளர்கள்

17. ஸ்ருதி ஜெயதேவன் (மாடல் அழகி) 18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

இதுவரை நடந்து முடிந்த 4 சீசன்களிலும் ஆண் போட்டியாளர்களுக்கு இணையாக பெண் போட்டியாளர்கள் இடம்பெற்று இருந்தனர். ஆனால் இந்த சீசனில் 7 ஆண் போட்டியாளர்கள், 10 பெண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

Previous Post

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக களமிறங்கும் விஜய் சேதுபதி

Next Post

சமந்தா – நாக சைதன்யா பிரிய காரணமான நடிகர் இவரா?

Next Post
சமந்தா – நாக சைதன்யா பிரிய காரணமான நடிகர் இவரா?

சமந்தா - நாக சைதன்யா பிரிய காரணமான நடிகர் இவரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures