Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி, பிரதமரை இன்று சந்திக்கவுள்ளார் இந்திய வெளிவிவகார செயலாளர்

October 4, 2021
in News, Sri Lanka News
0
ஜனாதிபதி, பிரதமரை இன்று சந்திக்கவுள்ளார் இந்திய வெளிவிவகார செயலாளர்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர்  ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கண்டி, யாழ்ப்பாணத்திற்கான விஜயங்களை மேற்கொண்டுள்ளதுடன் திருகோணமலை விஜயத்தை மேற்கொண்டு இந்திய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டுள்ளார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அரசியல், சிவில் பிரதிநிதிகளை சந்தித்தும் கலந்துரையாடியுள்ள அவர் இன்றைய தினம் ஜனாதிபதி, பிரதமர்,வெளிவிவகாரத்துறை அமைச்சர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லா நேற்று காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாட்டினை மேற்கொண்டு ஆசிபெற்று தனது விஜயத்தினை ஆரம்பித்திருந்தார். இந்த நிகழ்வில் இந்திய தூதுவர் கோபால் பாக்லேவும் கலந்துகொண்டிருந்தனர். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் கௌரவ தியவதன நிலமே அவர்களினால் வரவேற்கப்பட்டு ஆலய நிருவாகிகளுடனும் கலந்துரையாடியிருந்தார்.

தலதா மாளிகையில் ஊடகவியலாளர்களிடத்தில் கருத்து பகிர்ந்திருந்த அவர், “ இது எனது முதல் விஜயம், அதேபோல் எனது விஜயத்தில் முதலாவது இடமாக இங்கு வந்து இறை ஆசியை பெற்றுள்ளேன். இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிலான நீண்டகால கலாசார பண்பாட்டு உறவுமுறை காணப்படுகின்றது. இங்கு வந்தமை மகிழ்ச்சியளிக்கின்றது” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தனர்.

குருநாகல் விஜயம்

கண்டி விஜயத்தின் பின்னர் நண்பகல் குருநாகலுக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லா இலங்கை ஐ.ஒ.சி யின் அபிவிருத்தி வேலைத்திட்ட பகுதியொன்றுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

திருகோணமலை விஜயம்

அதன் பின்னர் திருகோணமலை எண்ணெய் குதங்களை பார்வையிட சென்றிருந்த அவர் இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் இயங்கிக்கொண்டுள்ள எண்ணெய் குதங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். திருகோணமலையின் உள்ள ஐ.ஒ.சியின் தலைமையகத்திற்கு சென்றிருந்த அவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.

யாழ் விஜயம்

திருகோணமலை விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று பிற்பகல் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார செயலாளர், வடக்கு ஆளுநர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துடையாடியிருந்தார்.

ஜனாதிபதி -பிரதமர் – வெளிவிவகார அமைச்சர்  மற்றும் அரசியல் கட்சிகளுடன் சந்திப்பு

இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லா இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்,பீரிசை வெளிவிவகார அமைச்சில் சந்திக்கவுள்ளதுடன் ஆளுந்தரப்பு அமைச்சர்கள் சிலருடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இன்று பிற்பகல் ஐந்து மணிக்கு சந்திப்புகள் இடம்பெறவுள்ளன. இந்திய தூதுவர் இல்லத்தில் இடம்பெறும் இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களாக எம்.எ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும், நிகழ்கால அரசியல் செயற்பாடுகள், வடக்கு கிழக்கு விவகாரங்கள் குறித்து பேசவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 95 பேர் கைது

Next Post

காபூல் மசூதிக்கு வெளியில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பொதுமக்கள் பலி

Next Post
காபூல் மசூதிக்கு வெளியில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பொதுமக்கள் பலி

காபூல் மசூதிக்கு வெளியில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பொதுமக்கள் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures