Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விநாயகர் சதுர்த்தி அன்று வீடுகளில் வழிபடுவது எப்படி?

September 10, 2021
in News, ஆன்மீகம்
0
விநாயகர் சதுர்த்தி அன்று வீடுகளில் வழிபடுவது எப்படி?

ஆவணி மாதத்தில் வளர்பிறையில் நான்காம் நாளன்று வரும் சதுர்த்தியை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று கொண்டாடுகிறோம். இது விநாயகர் அவதரித்த தினமாக பார்க்கப்படுகிறது.

வீடுகளில் நாம் அவரவர் சக்திக்கு தக்கவாறு வழிபாடுகளை செய்யலாம். கோலம் போட்ட மனையில் அச்சுமண் பிள்ளையாரை வாங்கி வந்து, அதனை மண்டபத்தில் சின்ன வாழைக்கன்று கட்டி, மாவிளை தோரணங்கள் கட்டி, மலர்களால் அலங்காரம் செய்வார்கள்.

பின்னர் மண் பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் இட்டு, எருகம்பூ மாலை, அருகம்புல் மாலை ஆகியவை அணிவித்து அலங்காரம் செய்வார்கள். விநாயகருக்கு மிகவும் பிரியமான பத்ரம், வன்னிபத்ரம், அருகம்புல் இவைகள் கொண்டு அர்ச்சனை செய்தால் அதற்கான பலன் ஏராளம் என சொல்லப்படுகிறது.

மேலும் 21 வகையான இலைகளால் அர்ச்சித்தல் சிறப்பு. அந்த இலைகளின் பெயர், அர்ச்சனை செய்தால் கிடைக்கும் பலன்கள் விவரம் வருமாறு:-

1)முல்லை-அறம்,2)கரிசலாங்கண்ணி-இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள், 3) வில்வம்- இன்பம்; விரும்பியவை அனைத்தும், 4) அறுகம்புல் – அனைத்துப் பாக்கியங்களும், 5) இலந்தை – கல்வி, 6) ஊமத்தை – பெருந்தன்மை, 7) வன்னி – இவ்வுலகில் வாழும் காலத்திலும் சொர்க்கத்திலும் பல நன்மைகள், 8) நாயுருவி – முகப்பொலிவு, அழகு, 9) கண்டங்கத்திரி – வீரம், 10) அரளி-வெற்றி. 11) எருக்கம் இலை- கருவில் உள்ள சிசுவுக்கு பாதுகாப்பு, 12) மருதம் – குழந்தை பேறு, 13) விஷ்ணுக்ராந்தி – நுண்ணறிவு, 14) மாதுளை-பெரும்புகழ், 15) தேவதாரு – எதையும் தாங்கும் இதயம், 16) மருவு – இல்லற சுகம், 17) அரசு – உயர் பதவி, மதிப்பு, 18) ஜாதி மல்லிகை – சொந்த வீடு, பூமி பாக்கியம், 19) தாழம் இலை – செல்வச்செழிப்பு, 20) அகத்திக் கீரை – கடன் தொல்லையில் இருந்து விடுதலை, 21) தவனம் – நல்ல கணவன்-மனைவி அமைதல்.

இந்த 21 இலைகளைத் தவிர நெல்லி, மரிக்கொழுந்து, கரிசலாங்கண்ணி, மாவிலை, துளசி, பாசிப்பச்சை ஆகிய இலைகளாலும் விநாயகருக்கு அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்தபின் பலவிதமான கனிகள், முக்கியமாக நாவல் பழம், மாதுளம் பழம், கொய்யாப்பழம், விளாம்பழம் ஆகியவை நைவேத்யம் செய்ய வேண்டும்.

விநாயகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யும் போது அருகம்புல்லும், வன்னி இலைகளும், மந்தாரைப் பூவும் அவசியம் இருக்க வேண்டும். பொதுவாக சிவபெருமானின் பூஜைக்கு உகந்த எல்லா மலர்களும் விநாயகர் வழிபாட்டுக்கு ஏற்றவைதான். ஆனால் தாழம்பூ, துளசி ஆகியவை மட்டுமே கண்டிப்பாகக்கூடாது. பெரும்பாலன ஆலயங்களில் விநாயகருக்கு துளசி மாலை அணிவிக்கிறார்கள். என்றாலும் இது தவறாகும்.

விநாயகருக்கு நைவேத்தியம் செய்யப்பின் வருவனவற்றைப் படைக்கலாம். அப்பம், அவல், அமுது, அவரை, இளநீர், எள்ளுருண்டை, கரும்பு, கல்கண்டு, வள்ளிக்கிழக்கு, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், மிளகு சாதம், தேன், தினைமாவு, நெய், பச்சரிசி, பால்,பாகு வெல்லம், பணியாரம், கொழுக்கட்டை, பிட்டு, லட்டு, வடை, வெண்ணெய், விளாம்பழம், நாவல்பழம், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், ஆகியவை. விநாயகருக்கு அபிஷேகம் செய்ய சந்தனாதித் தைலம், மாப்பொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி, ரசபஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், கருப்பஞசாறு, இளநீர், சந்தனம், பழ ரசங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

மேலும் பிள்ளையாருக்கு பாயாசம், வடை, அப்பம் ஆகியவைகளும் முக்கியமாக கொழுக்கட்டை விநாயகருக்கு பிடித்தமானது.

http://Facebook page / easy 24 news

Previous Post

குங்குமப்பூ சாப்பிட்டால் ஆபத்தா?

Next Post

விநாயகரை நீரில் ஏன் கரைக்கிறார்கள்?

Next Post
விநாயகரை நீரில் ஏன் கரைக்கிறார்கள்?

விநாயகரை நீரில் ஏன் கரைக்கிறார்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures