Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காணாமல் ஆக்கப்படுதல் என்பது இனவழிப்பின் உபாயமே!: தீபச்செல்வன்

August 30, 2021
in News, Sri Lanka News, கட்டுரைகள்
0
காணாமல் ஆக்கப்படுதல் என்பது இனவழிப்பின் உபாயமே!: தீபச்செல்வன்

ஈழத் தீவில் காணாமல் ஆக்கப்படுதல் என்பது ஒரு இனத்தை துடைப்பதற்கான பெரு உபாயமாக கையாளப்படுகிறது. இங்கே நிலம் காணாமல் போகிறது. கடல் காணாமல் போகிறது. காடுகள் காணாமல் ஆக்கப்படுகின்றன. மனித உயிர்களோ இவை யாவற்றையையும் விட அற்பமாக கருதப்பட்டு காணாமல் ஆக்கப்படுகின்றன. இன்றைக்கு இனவழிப்பின் சாட்சிகளாக இருப்பவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களே. இல்லாதவர்களே எங்கள் சாட்சிகள். இல்லாதவர்கள் எங்கள் இனத்திற்காக போராடுவதைப் போல இருக்கும் நாம் போராடுவதில்லை என்பது எத்துணை துயரமானது? இல்லாதவர்கள் இருப்பதைப்போல போராட இருக்கும் நாமோ இல்லாதவர்களைப் போல இருக்கிறோம். 

ஆகஸ்ட் 30 சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினம். உண்மையில் இதுபோன்ற ஒரு தினத்தை கொண்டாட இந்த உலகம் வெட்கப்பட வேண்டும். மனித உயிர்களுக்கும் மனித உரிமைக்கும் எதிரான அநீதிகளின் அதிகரிப்புதான் இந்த நாளை கொண்டாடுகின்ற சூழலை உருவாக்குகின்றது. இந்த நாளை கொண்டாடுகின்ற இனமான நாம் ஆகிவிட்டதை எண்ணி மிகவும் துயருர வேண்டி இருக்கின்றது. ஈழத் தெருக்கள் என்பது உண்மையில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தேடியலைகின்ற அன்னையர் நிலம்தான்.

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையொன்றின் அன்னையொருத்தியின் முகத்தை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. அவரின் கண்களை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. காலத்துயரம் நிரம்பிய அக் கோலத்தை பார்ப்பது என்பது மனசாட்சி உள்ள மனிதர்களை உலுப்புகின்ற செயல். போர் முடிந்து கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பிள்ளைகளை அரசிடம் தொலைத்த அன்னையர்களும் தந்தையர்களும் அழுது புலம்பி போராட்டத்தை நடாத்தியே வருகின்றனர். உலகிலேயே இவ் அவலம் அதிகரித்திருப்பது இலங்கையில்தான்.

உலக அளவில் லட்சக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருப்பாக சர்வதேச புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இலங்கை அரசு நடாத்திய இன அழிப்பு போரில் ஒன்றரை லட்சம் மக்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். எனவே உலகில் அதிகம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடு இலங்கை என்ற பெருமையும் உண்டு.

காணாமல் ஆக்கப்படுதல் என்பது இன அழிப்பின் ஒரு உபாயமாகத்தான் பயன்படுத்தப்படுகின்றது. உலகில் ஜனநாயக ரீதியில் உரிமைகளை கோருகிறவர்களை காணாமல் ஆக்குவது என்பது ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகின்றது என்ற கருத்து உண்டு. உண்மையில் அதை கனகச்சிதாக இலங்கைக்குப் பொருந்துகின்றது. உரிமை கோரி போராடிய ஈழத் தமிழ் மக்களை காணாமல் ஆக்குவதை ஒரு வழிமுறையாகவும் ஆயுதமாகவும் இலங்கை அரசாங்கம் கையாண்டு வருகின்றது.

ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே அரசாங்கம் காணாமல் போதலை ஒரு கருவியாக கையாள்கின்றது. குறிப்பாக இராணுவத்தின் வசம் போரில் வீழ்ந்த தமிழர் பகுதிகளில் காணாமல் ஆக்கப்படுதலின் வாயிலாக இளைஞர்கள், யுவதிகள் இல்லாமல் செய்யப்படுகின்றனர். காணாமல் ஆக்கப்படும் அவர்கள் மிக மோசமான வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர். சில கொலைகள் அப்படி அம்பலமாகியுமுள்ளன.

சிங்கள இராணுவத்தின் வசமிருந்த யாழ்ப்பாணம் போன்ற அரச காட்டுப்பாட்டு பகுதிகளில் வீட்டை விட்டு வெளியில் சென்ற பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். ஏன் வீடுகளுக்குள் நுழைந்தும் இரண்டு மூன்று சகோதரர்களாக கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது போரில் கைது செய்யப்பட்ட பல இளைஞர், யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அத்துடன் போர் முடிவுக்கு வந்த பின்னர் சரணடைந்தவர்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றவர்களும்கூட காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இன்றைக்குப் போர் முடிந்து பத்தாண்டுகள் கடந்தும் இலங்கை அரசாங்கம், இவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சொல்லாமல் கள்ள மௌனம் சாதித்து வருகின்றது. அவர்கள் உயிருடன் உள்ளனரா? அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை அரசாங்கம் சொல்ல வேண்டியது அவ் அரசின் வகை கூறலும் பொறுப்புமாகும். இதிலிருந்து ஒருபோதும் இலங்கை அரசாங்கம் தப்பிக்கொள்ள முடியாது. இது மனித உயிர்கள் சம்பந்தப்பட்ட மிகவும் உணர்வுபூர்வமான சிக்கலான விடயமாகும்.

காணாமல் ஆக்கப்படுதல் இலங்கையின் கொடூரமான இன ஒடுக்குமுறையை இனவழிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றது. அது மாத்திரமல்ல, இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களை தனது சொந்தப் பிரஜைகளாக கருதவில்லை. இன்னொரு நாட்டின் அடிமைகளாக கருதியதினாலேயே இவ்வாறு காணாமல் ஆக்கியிருக்கிறது. தமிழ் மக்கள் தமது தாயகத்தை கோரினால் காணாமல் ஆக்கப்படுவார்கள் என்ற மிக மோசமான அச்சுறுத்தலையே இதன்மூலம் இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு விடுத்திருக்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில், சர்வதேச தலையீடுதான் நீதியைப் பெற்றுத் தரும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. உண்மையில் இந்த விடயத்தை அரசியல் முதலீடாக கருதாமல் உணர்வுபூர்வமான விடயமாக கருதி, விளைவுகளை உருவாக்கும் செயற்பாடுகளில் தமிழ் தலைமைகள் ஈடுபட வேண்டும். இதனை ஆதாரபூர்வமான விடயங்களுடன் சர்வதேச ரீதியாக வழக்குகளை பதிவு செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதே நீதிக்கான வழிமுறையாகும்.

உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் மிகுந்த ஆளுமைகள். எமது இனத்தின் வளத்திற்கும் செழிப்புக்கும் அடிப்படையானவர்கள். அத்தகைய மனிதர்களை இழந்த இந்த மண் எத்துணை இழப்பை சந்தித்திருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள்? ஈழப் போரில் இலங்கை அரசு இழைத்த அநீதிகளை உலுப்பும் ஒரு ஆயுதமாகவும் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் மாறியிருக்கிறது. இதற்கு இலங்கை அரசு பதில் அளித்தே ஆக வேண்டும். இலங்கை அரசு அளிக்கும் பதில் என்பது பல்வேறு உண்மைகளை அம்பலம் செய்வதுடன் இத்தீவில் ஈழத் தமிழரின் விடுதலைக்கும் அமைதிக்குமான திறவுகோலாகவும் இருக்கும். அதுவே காயம்பட்ட இனத்திற்கான மருந்தும் நீதியுமாகும்.

கடல் எம் சனங்களுக்கு சவக்குழியானது! கவிஞர் தீபச்செல்வன் - Vanakkam London

கவிஞர் தீபச்செல்வன்

http://Facebook page / easy 24 news

Previous Post

மீண்டும் ‘96’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி?

Next Post

காபூல் விமான நிலையத்தை நோக்கி பல ராக்கெட் தாக்குதல்கள்

Next Post
காபூல் விமான நிலையத்தை நோக்கி பல ராக்கெட் தாக்குதல்கள்

காபூல் விமான நிலையத்தை நோக்கி பல ராக்கெட் தாக்குதல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures