Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இருபது 20 உலகக் கிண்ண முதல் சுற்றில் 3 அணிகளை இலங்கை எதிர்த்தாடும்

August 17, 2021
in News, Sports
0
இந்தியா, இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் – இன்று நடக்கிறது

ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 போட்டிகளுக்கு முன்னோடியாக நடைபெறவுள்ள முதல் சுற்றில்  நமீபியா, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய 3 அணிகளை இலங்கை எதிர்த்தாடவுள்ளது.

இவ் வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முதல் சுற்று மற்றும் சுப்பர் 12 சுற்று என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் சுற்று தகுதிகாணுக்கு ஒப்பானதாகும்.

முதல் சுற்றுப் போட்டிகள்  ஓமான் தலைநகர் மஸ்கட்டிலும் ஐக்கிய இராச்சியத்தின் அபு தாபி மற்றும் ஷார்ஜாவிலும் அக்டோபர் 17ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதிவரை நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தில் (துபாய், அபு தாபி, ஷார்ஜா) இரண்டு குழுக்களில் சுப்பர் 12 லீக் போட்டிகள் அக்டோபர் 23ஆம் திகதியிலிருந்து நவம்பர் 8ஆம் திகதிவரை நடைபெறும்.

அரை இறுதிப் போட்டிகள் நவம்பர் 10ஆம், 11ஆம் திகதிகளிலும் இறுதிப் போட்டி நவம்பர் 14ஆம் திகதியும் நடைபெறும்.

முதல் சுற்றில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் ஏ குழுவிலும் பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, பப்புவா நியூ கினி, ஓமான் ஆகிய அணிகள் பி குழுவிலும் லீக் முறையில் மோதவுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் லீக் சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெறும்.

இலங்கை தனது முதலாவது லீக் போட்டியில் நமீபியாவை அபு தாபியிலும் (அக்டோபர் 18), இரண்டாவது லீக் போட்டியில் அயர்லாந்தை அபு தாபயிலும் (அக்டோபர் 20), கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்தை ஷார்ஜாவிலும் (அக்டோபர் 22) சந்திக்கவுள்ளது.

லீக் சுற்று முடிவில் ஏ குழுவில் முதலாம் இடத்தையும் பி குழுவில் இரண்டாம் இடத்தையும் பெறும் அணிகள், சுப்பர் 12 சுற்றில் முதலாவது குழுவில் இடம்பெறும் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுடன் இணையும்.

பி குழுவில் முதலாம் இடத்தையும் ஏ குழுவில் இரண்டாம் இடத்தையும் பெறும் அணிகள் சுப்பர் 12 சுற்றில் இரண்டாவது குழுவில் இடம்பெறும் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் இணையும்.

இந்த வருடமும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெறுகின்றன.  50 ஓவர் உலகக் கிண்ணம், இருபது 20 உலகக் கிண்ணம் ஆகிய இரண்டிலும் இந்த இரண்டு அணிகளும் மொத்தமாக 12 தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. ஆனால், ஒரு தடவையேனும் பாகிஸ்தான் வென்றதில்லை.

ஏழு 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளிலும் 5 இருபது 20 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் பாகிஸ்தானை இந்தியா வெற்றிகொண்டுள்ளது. ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்ததது.

_____________________________________________________________________________

 http://Facebook page / easy 24 news 

Previous Post

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே தீர்வல்ல: லக்ஸ்மன் கிரியெல்ல

Next Post

2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்துக்கான அட்டவணை

Next Post
2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்துக்கான அட்டவணை

2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்துக்கான அட்டவணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures