Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிஜ மனிதர்களை சந்திக்க வரும் ரோபோக்கள்

September 7, 2016
in News
0
நிஜ மனிதர்களை சந்திக்க வரும் ரோபோக்கள்

நிஜ மனிதர்களை சந்திக்க வரும் ரோபோக்கள்

எல்லாவிதமான வானிலை தகவமைப்புகளிலும் பணிசெய்யும் ரோபோக்களை அதிகமாக தொடர்ந்து தயாரிக்கும் நிறுவனம் உருவாகியுள்ளது.

இந்த நிறுவனம் தயாரிக்கும் இயந்திர மனிதர்கள் 2017 மத்தியில் நிஜ மனிதர்களை சந்திக்க நூற்றுக்கணக்கில் வர இருக்கிறார்கள்.

பல நாடுகளை சேர்ந்த ஒரு பொறியியலாளர்கள் குழு இந்த நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. அதற்கு அடிப்படை பொருளாதார தேவையான 10 மில்லியன் அமெரிக்க டொலர் மூலதனத்தை பெறுவதற்காக தங்கள் மீது நம்பிக்கையுடைய வணிக நிறுவனங்கள் இதில் பங்கெடுக்கலாம் எனவும் பொது அறிவிப்பு செய்துள்ளனர்.

ரெபியூடா ரோபோடிக்ஸ் (Repyuta Robotics) என்ற இந்த நிறுவனத்தின் அறிவிப்பை தொடர்ந்து, அதன் பங்குதாரர்களாக சில அமைப்புகள் சேர்ந்துள்ளன.

இதற்கு, கடந்த ஆண்டு ஜனவரியில், 2.95 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியளித்து SBI நிறுவனம் வித்திட்டது. அடுத்ததாக, சமீபத்தில் சுவீஸ் அரசும் 5 லட்சம் அமெரிக்க டொலர் நிதியளித்து அதில் பங்குதாரராய் தன்னை சேர்த்துக்கொண்டுள்ளது.

இது சூரிச் பல்கலைக்கழகத்தின் பிரயோக தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தில் ஒரு கூட்டு நிறுவனமாக செயல்படுகிறது.

ரெபியூடா தயாரிக்கும் ரோபோக்கள் எல்லாவித வானிலைகளையும் தாங்கிக்கொள்ளும் சிறப்புடன் அமைக்கப்படுவதால் அதன் விலை அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.

இப்போது ரோபோவின் உட்கட்டமைப்பு ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம் அடுத்த ஆண்டின் மத்தியில் நிச்சயமாக படைப்புகள் வெற்றிகரமாக வெளிவரத் தொடங்கும் என்கிறார் இதன் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கஜன் மோகனராஜா.

இதன் மற்றொரு நிர்வாகியான கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ‘இந்த குழுவில் உள்ளவர்கள் வெளியில் விளம்பரப்படுத்துவதை விடவும் சிறப்பாக ஆக்கங்களை கொடுக்கக்கூடியவர்கள்.

இவர்கள் இதற்கு முன்பு கப்பல் கட்டும் வேலை, மின் உற்பத்தி நிலையங்கள், காற்றாலை அமைத்தல், ரயில் நிறுத்தங்கள் அமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டவர்கள் என்றார்.

இந்த ரோபோக்களை முற்றிலும் வெளியே வைத்து பயன்படுத்தப்படுத்தலாம் இது பயன்படும் இடங்களில் அந்த பணியையோ, ரோபோக்களையோ ஆய்வுசெய்ய, மேற்கொண்டு ஒரு மனிதரை அங்கு நியமிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இவை அணைகள் போல தொலைதூர இடங்களுக்கு அருகே இருந்து அடிக்கடி கவனிக்கும் பணிகளுக்கு மிகவும் அவசியமானதாகும்.

எந்த வானிலைக்கும் பொருந்தும்படியான 24/7 வன்பொருள் இதில் பயன்படுத்தப்படுகிறது. இதன் முதல் படைப்பையும் அதன்பிறகு, வரிசையான ஆக்கங்களுக்கான அடித்தளமிடாமலும் நான் படுக்கையில் தூங்கச் செல்ல முடியாது என்று கூறி சிரிக்கிறார் கஜன்.

ஆரம்பத்தில் இது வெறும் 8 பொறியாளர்களைக் கொண்ட குழுவாக சுவிட்சர்லாந்தில் இருந்தது.

ஆனால், இப்போது இந்தியா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் என 27 முழுநேர ஊழியர்களை கொண்ட குழுவாக விரிவடைந்துள்ளது.

அதேசமயம், 10 பேர் கொண்ட குழு 10 மாதங்களில் செய்து முடிப்பதற்கு பதிலாக, அந்த பணியை 100 பேரை சேர்த்து ஒரு மாதத்திற்குள் முடிக்கலாம் என கணக்கிடுவது, இந்த பணிக்கு பொருந்தாது.

காரணம் நிறைய சோதனைகளை திரும்ப திரும்ப செய்ய வேண்டியிருக்கும் என்றும் கூறுகின்றார் கஜன்.

இப்போது உள்ளிடங்களில் செயல்படும் அமைப்பு அளவில் வளர்ந்துள்ளது. ஆரம்பத்தில் சாதாரணமாக அலமாரியில் வைக்கும் ரோபோக்களை செய்யவே திட்டமிட்டோம். பிறகு, பயனான இந்த இலக்கு தோன்றியது.

கூடவே ரோபோக்களை உபயோகிக்கும் முறைகளுக்கான அமைப்புகளையும் உருவாக்கி வருகிறோம். அடுத்த ஆண்டில் 300 அல்லது 400 ரோபோக்கள் விற்க திட்டமிட்டுள்ளோம் என்கிறார் கஜன்.

இதுபற்றி, இதன் நிறுவனரும் உயர் நிர்வாக அதிகாரியுமான அவர், செப்டம்பர் 7 (இன்று) ல் டோக்கியோ மாநாட்டில் பேச இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Previous Post

போக்கிமேன் கோவுக்கு எதிராக வழக்கு

Next Post

அழிக்கப்பட வேண்டிய ஒன்று ஆழ ஊடுருவி செல்கின்றது! விழித்தெழுங்கள் தடுத்திடுங்கள்..

Next Post
அழிக்கப்பட வேண்டிய ஒன்று ஆழ ஊடுருவி செல்கின்றது! விழித்தெழுங்கள் தடுத்திடுங்கள்..

அழிக்கப்பட வேண்டிய ஒன்று ஆழ ஊடுருவி செல்கின்றது! விழித்தெழுங்கள் தடுத்திடுங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures