விக்ரம் படத்துக்கு வந்த சோதனை
விக்ரம் நடிப்பில் மிக பிரம்மாண்டமான செலவில் உருவாகியுள்ள படம் இருமுகன். இப்படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது .
தமிழகத்தில் மட்டும் மொத்தம் 350 திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு பெரிய நடிகரின் படம் நாளை வெளியாகிறது என்ற ஒரு ஆர்ப்பாட்டமே ரசிகர்களிடம் மற்றும் பொதுமக்களிடம் இல்லை. இப்படத்தின் டிக்கெட் முன்பதிவும் சுமாராகத்தான் இருக்கிறது
இப்படத்தின் விளம்பரம் சரியாக மக்களிடம் சென்று அடையவில்லையே என்ற பேச்சு நிலவி வருகிறது.
இப்படத்தின் மேல் மிகுந்த நம்பிக்கையில் உள்ளார் விக்ரம், கண்டிப்பாக படம் பார்த்து பிறகு மக்களின் விமர்சனம் எல்லாரிடத்திலும் சென்று அடையும் என்று நம்பியுள்ளது படக்குழு.
பிரம்மாண்டமாக செலவுசெய்து எடுத்தாலும் அதற்க்கான விளம்பரம் யுக்தி ரொம்ப முக்கியம் என்பது இப்போதையே சினிமா கலாச்சாரம்.
Read next : புரியும் போது அருகிலிருக்க மாட்டேன் – ஐஸ்வர்யா ராய் மகளுக்கு கடிதம் எழுதிய சூப்பர்ஸ்டார்