பிரித்தானிய இளவரசியான மறைந்த டயானாவின் 60 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு லண்டனில் நேற்று (01.07.2021) சிலை திறக்கப்பட்டுள்ளது.


1997ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த ஒரு கார் விபத்தில் டயானா உயிரிழந்து 23 ஆண்டுகள் கடந்துவிட்டது.

இந்நிலையில் லண்டனில் உள்ள கென்சின்ங்டன் ( Kensington ) அரண்மனை தோட்டத்தில் டயானாவின் சிலையை அவரது மகன்களான இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி ஆகிய இருவரும் திறந்து வைத்தனர்.

கருத்து வேறுபாடு காரணமாக வில்லியமும் – ஹாரியும் பிரிந்திருந்த நிலையில், தங்களின் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்று தங்களது தாயாரின் சிலையைத் திறந்து வைத்து, அவரைப் பற்றி நினைவுக்கூர்ந்தனர்.














