Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இறந்ததாக புதைக்கப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்தார்- ஆஸ்பத்திரியில் நடந்த குழப்பத்தால் பரபரப்பு

June 4, 2021
in News, இந்தியா
0

அரசு மருத்துவமனையில் முக்தியால கிரிஜம்மா சிகிச்சையில் இருக்கும்போதே அவர் இறந்ததாக கூறி வேறு ஒருவரின் உடலை வழங்கியுள்ளனர்.

திருமலை:

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், ஜங்கய்யபேட்டையை சேர்ந்தவர் முக்தியால கிரிஜம்மா (வயது 71). இவருக்கு கடந்த மாதம் 12-ந் தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து விஜயவாடா அரசு மருத்துவமனையில் முக்தியால கிரிஜம்மா கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு சேர்ந்த அடுத்த 3 நாட்களில் முக்தியால கிரிஜம்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்து பிணத்தை வழங்கினர்.

பிணத்தை பெற்று கொண்டு உறவினர்கள் கிறிஸ்தவ முறைப்படி கல்லறையில் அடக்கம் செய்தனர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு முக்தியால கிரிஜம்மா உயிரிழந்ததற்கான சான்றிதழும் அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிரிஜம்மாவின் மகன் ரமேஷ் (45) தெலுங்கானா மாநிலம் கம்மம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் முக்தியால கிரிஜம்மாவிற்கும், அவரது மகன் ரமேஷிற்கும் பிரார்த்தனை கூட்டம் அவர்களது வீட்டில் நடந்தது.

அப்போது திடீரென முக்தியால கிரிஜம்மா அங்கு வந்தார். விஜயவாடா அரசு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்ததாக அவர் கூறினார். இறந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்ட நிலையில் உயிருடன் முக்தியால கிரிஜம்மா வீட்டிற்கு வந்ததை பார்த்த அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து விசாரணை செய்தபோது விஜயவாடா அரசு மருத்துவமனையில் முக்தியால கிரிஜம்மா சிகிச்சையில் இருக்கும்போதே அவர் இறந்ததாக கூறி வேறு ஒருவரின் உடலை வழங்கியுள்ளனர். அவரது முகமும் முக்தியால கிரிஜம்மாவை போல் இருந்ததால் உறவினர்கள் அடக்கம் செய்தது தெரிய வந்தது.

டாக்டர்கள் அலட்சியத்தின் காரணமாக முக்தியால கிரிஜம்மா இறந்ததாக கூறி வேறு ஒருவரின் உடலை உறவினர்களுக்கு வழங்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நிலையில் அடக்கம் செய்யப்பட்டவர் யார்? என்பது தெரியாமல் மருத்துவமனை நிர்வாகத்தினர் குழப்பத்தில் உள்ளனர்.

அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மற்றும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

http://Facebook page / easy 24 news
Previous Post

எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ விபத்தானது வேறு உள்நோக்கம் கொண்டதா? – ஐ.தே.க. சந்தேகம்

Next Post

குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வை கற்றுக்கொடுங்கள்

Next Post
குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வை கற்றுக்கொடுங்கள்

குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வை கற்றுக்கொடுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures