குடிவரவாளர் தடுப்பு நிலையங்களை $ 138 மில்லியன் கனேடிய டொலர் செலவில் மறுசீரமைக்க அரசு முடிவு!
குடிவரவுத் தடுப்புக் காவலை கடைசித் தீர்வாகவே பயன்படுத்தும் பொருட்டு, குடிவரவாளர்களை தடுப்புக் காவலில் வைக்காமல் அதற்கான பலவகையான மாற்றுத் தீர்வுகளை ஆராயவும், அரசு திட்டமிட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Ralph Goodale லவால் நகரிலுல்ள குடிவரவுத் தடுப்புக்காவல் நிலையத்திற்கு மேற்கொண்ட விஜயமொன்றின் போது தெரிவித்தார்.
மேலும் குடிவரவுத் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டோர், சமூக அமைப்புகளினால் மேற்பார்வை செய்யப்படக்கூடிய ஒரு திட்டத்தையும் (community supervision program) அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் இவ்வாறு குடிவரவாளர்கள் தடுத்து வைக்கப்படும் நிலையங்களில் இடநெருக்கடி அதிகமாக உள்ளமை, உள-நல ஆரோக்கிய வசதிகள் இல்லாமை போன்ற பல குறைபாடுகள் காணப்படுவதாக கனேடிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.