தாயகத்தில், நலிவுற்ற சிறார்களுடன் கோடை விடுமுறையைக் கழித்த கனடா வாழ் தமிழ் இளைஞர்!
கோடைகால விடுமுறையை கழிப்பதற்காக புலம் பெயர் தமிழர், தாய்மண்ணிற்கு போட்டா போட்டியுடன் கிளம்பியுள்ளனர் .
தமது உற்றார் உறவினர்களை சந்தித்து, தம் பிள்ளைகளுக்கு பிறந்த மண்ணை காட்டியதுடன் சுற்றுலா செல்வதிலேயே பெரும்பாலானோருடைய விடுமுறை தினங்கள் கழிகின்றது.
அவ்வப்பொழுது தமது மகிழ்ச்சியை புகைப்படங்களுடன் முகநூலில் பதிவேற்றுவதையும் மறப்பதில்லை.
ஆனால், இளைஞன் கேசவன் ஜெகநாதனோ தனது விடுமுறை நாட்களை மிகவும் வித்தியாசமாகவும், பலன் உள்ள முறையிலும் செலவழிப்பது மற்றைய இளையோருக்கு சிறந்த எடுத்துகாட்டாக இருக்கும் என்பதில் சிறு ஐயமும் இல்லை .
ஆம், 23 வயதாகும் கேசவன் ஜெகநாதன் என்ற இவ் இளைஞன் கனடா நாட்டிலிருந்து தாய்மண்ணுக்கு விடுமுறையில் சென்றிருந்த வேளையில், அங்கு “சேர்ச் ஓஃப் அமெரிக்கன் சிலோன் மிஷன்” (Church of American Ceylon Mission) எனும் சிறுவர் பாடசாலையில் கல்வி பயிற்றுவிக்கும் சேவையில் மனநிறைவு அடைகிறார் .
அதுமட்டுமின்றி அவரது பிறந்தநாளை ஒட்டி தன் செலவிலேயே அங்கு கல்வி பயிலும் சிறார்களுக்கு புது உடைகளை வழங்கி அவர்களுடன் கூடி மிக சிறப்பாக பிறந்தநாளைக் கொண்டாடியும் உள்ளார் .
இவ் இளைஞனின் செயல் மிகவும் பாராட்டத்தக்கது மட்டுமின்றி மற்றவர்களாலும் பின் பற்றக்கூடியதாகும் .
விடுமுறையில் செல்லும் ஒவ்வொருவரும் அங்கு கழிக்கும் நாட்களில் ஏதாவது முறையில் அவர்களாலான சிறு நற்செயல்களைச் செய்து விட்டு திரும்புவோமாயின் போரின் பின் சகஜ நிலைக்கு வர இன்னமும் போராடும் நம் உறவுகள் பயன்பெறுவர்.