வட மாகாணத்தின் முதலமைச்சராகும் தகைமை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்கு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.
கடந்த மாகாண சபை தேர்தலின் போதும் அவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகள் கோரியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

