மருதானை பஞ்சிகாவத்தை – சங்கராஜ மாவத்தையில், வர்த்தக நிலையமொன்றில் இன்று (24) அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுளளது.
இந்த தீப்பரவலை தடுப்பதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன் ,இந்த தீப்பரவலினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்த நபர் பலப்பிட்டியவைச் சேர்ந்த 46 வயதான நபர் ஒருவராவார்.

