தமிழ் தேசியக் கூட்டமைப்பும், நல்லாட்சி அரசாங்கமும் மாகாண சபையை இல்லாமல் செய்துள்ளதாக பிள்ளையான் என அழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.
களுதாவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

