முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் 2021 ம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி குழு கூட்டம் இணைத்தலைவர்களான வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான காதர் மஸ்தான் ஆகியோரின் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் ,கு.திலீபன், வினோ நோகராதலிங்கம், பிரதேச சபைகளின் தவிசாளர், மாகாண பிரதம செயலாளர், மாகாண திணைக்கள செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் ,முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட செயலக உயரதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் அரச அதிகாரிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கல்வி ,சுகாதாரம் ,வீதிப்புனரமைப்பு,விவசாயம் ,மீன்பிடி,உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்து செய்யப்பட்டுவரும் அபிவிருத்திகள் .குறித்த விடயங்களில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்ட விடயமாக கலந்துரையாடப்பட்டு வருகிறது

