மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜே.வீ.பி கோரியுள்ளது.
ஜே.வீ.பியின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக தேசிய விமான சேவையை பயன்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை, வெளிநாட்டு தூதுவர் காரியாலயங்களில் சேவையாற்றிய தேசிய நலன்புரி அதிகாரிகளை நாட்டுக்கு அழைத்ததன் காரணமாக வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளாக அனுமதிபத்திரம் உடைய வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் செயலாளர் எம்.எஸ்.எம் ஹர்சாட் இதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கையர்களை மீள நாட்டுக்கு அழைக்கும் செயற்பாட்டிற்கு தொழில் அமைச்சர் இடையூறு ஏற்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

