எதிர்கட்சியில் இருக்கும் போது எதுவும் கதைக்க முடியும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனைதான் செய்கின்றார்கள். பாசிக்குடாவில் உல்லாச விடுதிகள் அமைக்க பிள்ளையான் காணி வழங்கினார் என்று கடந்த ஆட்சியில் எதிர்கட்சியில் இருந்து கூக்கிரல் விட்ட ஒருவர் தற்போது ஆளும்தரப்பில் இராஜாங்க அமைச்சராகவுள்ளார் அவரால் கடந்த காலத்தில் கூறியதுபோல் இப்போது கூறமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் ஐந்து வீடுகள் அமைக்கும் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பேத்தாழையில் முதலாவது வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

