அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின், இந்த ஆண்டு முதலாம் தவணையின் முதலாம் கட்ட செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம், எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகுமென கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
கொவிட்-19 பரவல் காரணமாக பிற்போடப்பட்ட கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 10ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
இதனால் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

