மாதவன் மீது போட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு?
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பழனி வட்டாசியர் தாக்கல் செய்த பதில் மனுவில், அரசு நிலத்தை மனுதாரர் மாதவன் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. ராஜவாய்க்காலில் தண்ணீர் செல்வதற்கு இடையூறு செய்யவில்லை.
வாய்க்காலில் சீராக தண்ணீர் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யாருக்கும் இடையூறு இல்லாமல் அவரது சொந்த இடத்தில்தான் மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது, பழனி வட்டாட்சியரின் பதில் மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை எனகூறி வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.