ரஷ்யாவிடம் தங்கப்பதக்கத்தை பறிக்கும் சர்வதேச ஒலிம்பிக் குழு: ஏன் தெரியுமா!
கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற பீஜிங் ஒலிம்பிக் போட்டியின் போது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை பயன்படுத்தியதாக ரஷ்ய விளையாட்டு வீரர் வீராங்கனைகள் 14 பேரின் மீது குற்றம்சாட்டப்பட்டு, அவர்களது ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகள் மறுபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.
இந்நிலையில் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் 4×100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற ரஷ்யா வீராங்கனை யூலியா செர்மோஷன்ஸ்க்கயாவிடம் நடத்திய மறு பரிசோதனையில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட தங்கப்பதக்கத்தை ரஷ்யா திருப்பி தர வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தற்போது உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஒலிம்பிக்கில் அவர் நிகழ்த்திய முந்தைய சாதனையும் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.