1971 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி ஈரானில் ரும்ஸாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமவாயத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் இன்றைய தினம் உலக ஈர நிலங்கள் தினமாக பெயரிடப்பட்டுள்ளது.
ஈர நிலங்கள் மற்றும் நீர் என்பதே இம்முறை உலக ஈரநிலங்கள் தினத்தின் தொனிப்பொருள் ஆகும்.
இலங்கையில் பிரதானமாக ஆறு ஈர நில வலயங்கள் ரும்ஸா ஈரநிலங்களாக பெயரிடப்பட்டுள்ளன.
புத்தல தேசிய பூங்கா, ஆனைவிழுந்தான் சரணாலயம், மாதுகங்க சரணாலயம், வான்களில் சரணாலயம் குமண தேசிய பூங்கா மற்றும் வில்பத்து தேசிய பூங்கா என்பன இந்த ஆறு ஈரநிலங்களாக பெயரிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

