கொரோனா தொற்று நிலைமை காரணமாக மூடப்பட்டுள்ள இந்நாட்டு விலங்கியல் பூங்காக்கள் நாளை (01) தொடக்கம் திறக்கப்படவுள்ளன.
தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, தெஹிவளை மற்றும் பின்னவலை விலங்கியல் பூங்காக்கள் வாரத்தின் 7 நாட்களும், பின்னவலை யானைகள் சரணாலயம் வாரத்திற்கு 3 நாட்கள் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காகவும் வாரத்தில் 4 நாட்கள் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்காவும் திறக்கப்படவுள்ளன.
அதேபோல், ரிதியகம சஃபாரி பூங்காவை பார்வையிட வரும் சுற்றுலாப்பயணிகள் இணையத்தளத்தின் ஊடாக நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

